எந்த மொழியின் மீதும் வெறுப்பு காட்ட வேண்டாம் - சுஹாசினி மணிரத்னம்

சென்னை: வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியப் பண்பாடு என்பதால், நாம் எந்த மொழியின் மீதும் வெறுப்பு காட்டாமல் அனைத்து மொழிகளையும் கற்பது மிக அவசியம் என்று நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற லட்சியக் கனவோடு சினிமா உலகில் காலடி வைத்த சுஹாசினி, எதிர்பாராத விதமான நடிகையாக அவதாரம் எடுத்தார். 1980ஆம் ஆண்டில் வெளிவந்த நெஞ்சத்தை கிள்ளாதே என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

We must learn all languages – Suhasini Maniratnam

அந்தப்படம் ஹிட்டானதால் தொடர்ந்து பாலைவனச் சோலை, கோபுரங்கள் சாய்வதில்லை என சில படங்களில் நடித்தார். இருந்தாலும் இவருக்கு பெயர் சொல்லும் படம் என்றால், அது இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான சிந்து பைரவி படம் தான்.

இன்றைக்கும் கூட சுஹாசினி என்று சொன்னாலே நம்ம எல்லாருக்குமே ஞாபகம் வருவது சிந்து பைரவி திரைப்படம் தாங்க. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார். அந்தளவுக்கு அவருடைய கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கு.

நடிப்பில் தனக்கென தனி முத்திரை பதித்தது மட்டுமின்றி, தயாரிப்பாளர், இயக்குநர் என பல்வேறு பரிமாணங்களில் தன்னுடைய திறமையை தமிழ்த் திரையுலகில் நிரூபித்துள்ளார். இவங்க தமிழ்ல மட்டும் இல்ல தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடிச்சிருக்காங்க. பல விருதுகளையும் வாங்கி இருக்காங்க.

அது மட்டுமில்லாம தெலுங்கில் முன்னணி கதாநாயகியாகவும் வலம் வந்தார். இவருடைய கணவர் இயக்குனர் மணிரத்தினம். இவரைப் பற்றி சொல்லவே வேண்டாம் நம்ம இந்திய திரைப்படத் துறையிலே ஒரு மிகச்சிறந்த இயக்குனர்.

சுஹாசினி பல சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துக்கிறாங்க. அந்த வகையில சென்னை தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா சாரதா வித்யாலயா பெண்கள் பள்ளியில் மன அழுத்தம் குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முக்கியமான விஷயம் என்னன்னா, சுஹாசினி படித்ததும் இந்த பள்ளியில் தாங்க.

பல வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவியான நடிகை சுஹாசினி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பள்ளிகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தினால் தான் தமிழ் மொழியை கற்பது குறைந்துள்ளதாக கூறினார். இந்தியா பல்வேறு மொழிகளிலும் பேசும் மக்கள் வாழும் இடம். ஆகையால் நாம் எந்த மொழியின் மீதும் வெறுப்பு காட்டாமல் எல்லா மொழிகளையும் கற்பது மிக அவசியம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் இந்தியரின் பண்பாடு அதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X