தற்போதயை சூழ்நிலைக்கு கடவுள் 2 தேவை.. வேலு பிராபகரன்

சென்னை : கடவுள் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக இயக்கம் வேலு பிராபகரன் கூறியுள்ளார்.

இயக்குனர் மற்றும் நடிகரான வேலு பிரபாகரன் பல சர்ச்சை மிகுந்த படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவர். இவரின் படங்கள் பல தமிழில் எப்போதும் வரும் படங்களை காட்டிலும் மாறுபட்டதாகவே இருக்கும். இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ஒரு இயக்குனரின் காதல் டைரி .

1997 ம் ஆண்டு இவரின் இயக்கத்திலே வெளிவந்த கடவுள் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக அறிவித்திருந்தார். வேலு பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த கடவுள் படம் நல்ல வெற்றியை பதிவு செய்திருந்தது.

 தனித்துவமான கருத்துக்கள்

தனித்துவமான கருத்துக்கள்

இந்த படத்தின் கருத்துகள் அனைத்தும் தனித்ததுவமிக்கது அந்த சமயத்தில் இந்த படம் சமூகத்தில் பல கேள்விகளை கேட்டது தற்போது எடுக்க போகின்ற கடவுள் 2 படம் தற்போது சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை பதிவு செய்யும் என வேலு பிரபாகரன் கூறியுள்ளார். மேலும் முக்கியமான விஷயத்தை பகிர்ந்துள்ள வேலு பிரபாகரன் சில வருடங்களுக்கு முன்பு வந்து பெரிய வெற்றி அடைந்த அமீர்கானின் பி.கே படமே கடவுள் படத்தில் இருந்து உருவானது தான்.

 பிகே படத்தில்

பிகே படத்தில்

ஏனெனில் பி.கே படத்தின் கருவும் கடவுள் படத்தின் கருவும் ஒன்று. மேலும் கடவுள் படத்தின் பல காட்சிகள் நேரடியாக பி.கே படத்தில் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். தற்போதைய சூழலில் சாதிக்கு எதிராக இயக்குனர்கள் இயக்கும் படங்கள் வெந்ததும் வேகாததுமாக இருக்கிறது. அனைத்து படங்களையும் பார்த்தேன் சரியான கருத்துகள் இல்லை சரியாக சொல்ல படவேண்டியவை இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் .

 நாத்திகம் அதிகம்

நாத்திகம் அதிகம்

வேலு பிரபாகரன் தன் படங்கள் அனைத்திலும் நாத்திகத்தை அதிக அளவில் பேசுவார். சமீபத்தில் அவர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வந்தது மிக பெரிய சர்ச்சையானது. இதற்கு பதிலளித்துள்ள வேலுபிரபாகரன் நான் கடவுள் 2 படத்திற்கான கதைக்கு தேவைபட்ட விஷயங்களை சேகரிக்கவே கோயிலுக்கு செல்ல நேர்ந்தது என்று கூறியுள்ளார் .

 1995ல் வெளியான அசுரன்

1995ல் வெளியான அசுரன்

வேலு பிரபாகரன் பல மாறுபட்ட படங்களை எடுத்திருக்கிறார். இவர் ப்ரிடேடர் என்று வந்த அர்ணால்டின் பெரிய வெற்றி படத்தை தழுவி தமிழில் அசுரன் என்ற படத்தை 1995ல் எடுத்து இருக்கிறார். இப்படி மாறுபட்ட முயற்சிகளை செய்துள்ள வேலு பிரபாகரன் தற்போது கடவுள்2 படத்தை எப்படி எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X