அடுத்த காதலுக்கு ரெடியான நாக சைதன்யா.. சமந்தாவை பத்தி மட்டும் பேசாதீங்கன்னு கடுப்பாகிட்டாரு!

ஹைதராபாத்: அமீர்கானின் லால் சிங் சத்தா படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது.

அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாக சைதன்யா சென்னை, மும்பை, ஐதராபாத் என பல இடங்களில் படத்தை புரமோட் செய்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அடுத்த காதலுக்கு அவர் தயாராகி விட்டதை பற்றி பேசி உள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

காதல் மனைவி

காதல் மனைவி

சமந்தாவும் நாக சைதன்யாவும் சினிமாவுக்குள் ஒன்றாகத்தான் என்ட்ரி ஆனார்கள். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியானது. அந்த படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். அதன் தெலுங்கு வெர்ஷனில் இவர்கள் இருவரும் தான் ஹீரோ - ஹீரோயின். பல ஆண்டுகள் காதலித்த பின்னர், கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கருத்து மோதல்

கருத்து மோதல்

கடந்த ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு முன்பாக அக்டோபர் 2ம் தேதி இருவரும் ஒரு மனதாக ஒருவரை ஒருவர் பிரிவதாக அதிரடியாக அறிவித்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி பெயரை முதலில் சோஷியல் மீடியாவில் இருந்து சமந்தா நீக்கியதில் இருந்தே இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடித்து விட்டன என தகவல்கள் வெளியான நிலையில், இருவரும் பிரிவை அறிவித்தனர்.

அடுத்த காதலுக்கு ரெடி

அடுத்த காதலுக்கு ரெடி

நாக சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா உள்ளிட்ட அவரது குடும்பத்தில் சிலர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில், நடிகர் நாக சைதன்யா சமீபத்தில் அளித்த பேட்டியில், அடுத்த காதலுக்குத் தான் ரெடி என பேசியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

காதல் சுவாசத்தை போன்றது

காதல் சுவாசத்தை போன்றது

சுவாசிக்காமல் நாம் இருக்கிறோமா, இல்லையே.. அப்படித்தான் காதலும் எனக்கு என அந்த பேட்டியில் நாக சைதன்யா பேசியுள்ளார். நல்ல ஒரு காதலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன். சரியான இடத்தில் இருந்து அது கிடைத்தால் நிச்சயம் ஓகே சொல்லிவிடுவேன் என நாக சைதன்யா பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

சமந்தா டாப்பிக் போர் அடிச்சிடுச்சு

சமந்தா டாப்பிக் போர் அடிச்சிடுச்சு

சமந்தாவுடனான விவாகரத்து மற்றும் அதற்கு பிறகு அவரை சந்தித்து பேசுறீங்களே என்கிற கேள்விகளுக்கு அந்த டாப்பிக் மட்டும் வேண்டாம் ப்ளீஸ்.. அதை பற்றி பேசி பேசி போர் அடிச்சுடுச்சு, நாங்கள் இரண்டு பேருமே சிறந்த நண்பர்கள், அவ்வளவுதான் எனக் கூறி முடித்து விட்டார்.

காதலை அறிவித்து விட்டாரா

காதலை அறிவித்து விட்டாரா

ஏற்கனவே நடிகர் நாக சைதன்யா சோபிதா துலிபாலா எனும் நடிகையுடன் டேட்டிங் சென்று வருகிறார் என தகவல்கள் உலாவி வரும் நிலையில், அவர் இப்படி பேசியிருப்பது, ஒரு வேளை அந்த நடிகையுடன் லவ் செட்டாகிடுச்சா, அதற்கான மறைமுக சிக்னல் தான் இவரது இந்த பேச்சா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X