காசு கொடுத்துவிட்டு தான் இளையராஜா பாடல்களை பயன்படுத்தினோம்: 96 படக்குழு
Recommended Video
சென்னை: 96 படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதற்கு ராயல்டி கொடுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த 96 படத்தில் இளையராஜாவின் பாடல்களை அதிகம் பயன்படுத்தினார்கள். தன் பாடல்களை பிறர் தங்களின் படங்களில் பயன்படுத்துவதை இளையராஜா கடுமையாக விமர்சித்தார்.
தன் பாடல்களை பயன்படுத்தும் செயல் ஆண்மைத்தனம் இல்லாதது என்று விமர்சித்தார். இந்நிலையில் 96 படக்குழுவை சேர்ந்த ஆர்த்தி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
ராயல்டி
நான் 96 படக்குழுவை சேர்ந்தவர். நாங்கள் பயன்படுத்திய ராஜா சாரின் ஒவ்வொரு பாடலுக்கும் ராயல்டி கொடுத்துள்ளோம். அனுமதி பெற்றே பயன்படுத்தியுள்ளோம் என்று ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
பேட்டி
பேட்டி எடுத்தவர் எதற்காக இளையராஜாவிடம் போய் அப்படி ஒரு கேள்வி கேட்டார் என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் போட அதை பார்த்த ஆர்த்தியோ, ஆமாம், தேவையில்லாதது தான். இளையராஜாவின் வாய் பற்றி தெரிந்தும் அந்த கேள்வியை கேட்டிருக்கக் கூடாது. அவர் சொல்லும் லாஜிக் ஏற்கும்படி இல்லை என்றார்.
இசைஞானி
ஆர்த்தி இசைஞானி இளையராஜாவை விமர்சனம் செய்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
குற்றச்சாட்டு
அவர் பொதுவாக சொன்னார்.... உங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று இசைஞானி ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











