ப்ரியங்கா சோப்ரா திருமணத்தின்போது இப்படி ஒரு பிரச்சனையா?
Recommended Video
நியூயார்க்: ப்ரியங்கா சோப்ரா திருமணத்தின் போது இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டது அவரின் கணவர் நிக் ஜோனஸ் சொல்லித் தான் தெரிய வந்துள்ளது.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸின் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் ஜோத்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில் திருமணத்தின்போது ஏற்பட்ட பெரிய பிரச்சனை குறித்து நிக் ஜோனஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பீர்
என் திருமணத்தின்போது ஏற்பட்ட பிரச்சனையால் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டோம். என் நண்பர்கள் நிறைய பீர் குடிப்பார்கள். இந்நிலையில் திருமணத்தின்போது பீர் தீர்ந்துவிட்டது. அது தான் பெரிய பிரச்சனை. பீர் தீர்ந்துவிட்டதால் என் நண்பர்கள் மது அருந்தினார்கள் என்கிறார் நிக்.

ப்ரியங்கா
குழந்தை பெற்றுக் கொள்வதில் நானும், ப்ரியங்காவும் அவசரப்படவில்லை. அது நடக்கும்போது நடக்கும் என்கிறார் நிக். அண்மையில் ப்ரியங்கா நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தபோது அவரின் வயிறு பெரிதாக தெரிந்ததால் அவர் கர்ப்பமாக இருப்பதாக பேச்சு கிளம்பிய நிலையில் நிக் விளக்கம் அளித்துள்ளார்.

ஜோ ஜோனஸ்
நிக் திருமணத்தில் இருந்து ஒன்றை தெரிந்து கொண்டேன். என் திருமணத்தின்போது பீர் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய பீர் வாங்கி வைக்க வேண்டும் என்று நிக்கின் சகோதரர் ஜோ ஜோனஸ் தெரிவித்துள்ளார்.

சோஃபி டர்னர்
ஜோ ஜோனஸ் தனது காதலியான கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை சோஃபி டர்னரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவர்களின் திருமணம் பிரான்ஸில் நடைபெற உள்ளது. ஏற்கனவே ப்ரியங்காவும், சோஃபியும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











