பொன்னியின் செல்வன் படத்தை ஒரு படம் கூட மட்டும்தான் ஒப்பிட வேண்டும்...ஜெயம் ரவி சொன்ன படம் தெரியுமா?

சென்னை: பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் ட்ரெண்ட் பலகாலமாக உள்ளது.

தென்னிந்திய படங்களில் சமீபத்தில் தான் அதனை காண முடிகிறது. அப்படி தமிழில் இப்போதுள்ள முன்னணி நடிகர்கள் பலர் ஒன்று கூடி நடித்துள்ள படம்தான் பொன்னியின் செல்வன்.

இந்நிலையில் இந்த படத்தினுடைய புரமோஷனலில் பேசிய ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தை ஒரு படத்துடன் மட்டும் தான் ஒப்பிட முடியும் என்று கூறியுள்ளார்

நடிகர் பட்டாளம்

நடிகர் பட்டாளம்

நடிகர்கள் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி விக்ரம் பிரபு சரத்குமார் பிரபு ஜெயராம் பிரகாஷ் ராஜ் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் திரிஷா, சாரா உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது.

விக்ரமின் வைரல் பேச்சு

விக்ரமின் வைரல் பேச்சு

சமீபத்தில் வட இந்தியாவில் ஒரு புரமோஷனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தஞ்சாவூர் சிற்பங்களின் பெருமைகளை பற்றி விக்ரம் ஆங்கிலத்தில் உரையாடி இருப்பார். சாய்ந்துள்ள ஒரு கோபுரத்தை உலக அதிசயம் என்று கொண்டாடுகிறோம், ஆனால் அந்தக் காலகட்டத்திலேயே நமது அரசர்கள் கட்டிட கலைஞர்களை வைத்து பூகம்பத்தையே தாங்கக்கூடிய அளவிற்கு பல கோவில்களையும் கட்டிடங்களையும் கட்டியுள்ளனர். அதனைப் பற்றி நாம்தான் பெருமையாக பேச வேண்டும். தென்னிந்தியர்கள் வட இந்தியர்கள் என்று பிரித்து பார்க்காமல் இந்தியர்களாக நமது கலாச்சாரத்தை நாம்தான் கொண்டாட வேண்டும் என்று விக்ரம் பேசிய அந்தக் காணொளி மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது.

கிடுக்குப்புடி கேள்வி

கிடுக்குப்புடி கேள்வி

இதே போல இன்னொரு நிகழ்வில் பேசிய போது, வழக்கமாக படங்களை ஒப்பிடக் கூடாது. ஆனால் மக்கள் மத்தியில் அந்த ஒப்பீடு கண்டிப்பாக வரும் என்ற அடிப்படையில் ஒரு நபர் நடிகர் கார்த்தியிடம் கேள்வி கேட்டுள்ளார். பாகுபலி திரைப்படம் ஏற்கனவே மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படமும் அந்த வரவேற்பை பெறுமா என்று கேட்டபோது இந்தக் கேள்விக்கு என்னை விட ரவி நன்கு பதில் சொல்வான் என்று ஜெயம் ரவியை கைகாட்டி,"மச்சி நீ பதில் சொல்லு அப்பதான் நல்லா இருக்கும்" என்று கார்த்தி கூறினார்

ஜெயம் ரவி பதில்

ஜெயம் ரவி பதில்

அதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி,"யார் பதில் கூறினாலும் சரியாகத்தான் இருக்கும். பொன்னியின் செல்வனை பாகுபலியுடன் ஒப்பிடுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் எங்கள் படக் குழுவினர் யாரிடம் கேட்டாலும் ஒரே விஷயத்தை தான் கூறுவோம். பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று திரைப்படத்தை ஒப்பிட வேண்டும் என்றால் அதனை ஒரு படத்துடன் மட்டும்தான் ஒப்பிட வேண்டும். அது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்" என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X