கண்டிப்பா கட்சி தொடங்கியே ஆகணும்.. ரஜினிகாந்திடம் கோரிக்கை வைத்த மன்ற நிர்வாகிகள்!
சென்னை: கண்டிப்பாக கட்சித் தொடங்கியே ஆக வேண்டும் என்று ரஜினிகாந்திடம் மக்கள் மன்ற நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சென்னை வரும்படி நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று அழைத்திருந்தார்.

தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஆசோலனை நடத்துவதற்காக அவர், அவர்களை அழைத்திருந்தார்.
அதன்படி அவர்கள் வந்துள்ளனர். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 52 நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். அவர்களுடன் ஆலோசனையை தொடங்கியுள்ளார், ரஜினிகாந்த்.

அரசியல் கட்சி தொடங்கினால் ஏற்படும் சாதக பாதகங்களை அவர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுபற்றி தங்கள் கருத்துக்களை சுருக்கமாக அவர்களிடம் கேட்டுள்ளார் ரஜினி. அதற்கு அவர்கள் கண்டிப்பாக கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று ரஜினியிடம் கூறியதாக கூறப்படுகிறது.
Recommended Video



Click it and Unblock the Notifications











