twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அத்தனை பேரும் கண்ணீரால் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்வோம்- பாரதிராஜா

    By Sudha
    |

    சென்னை: முதல்வர் ஜெயலலிதா தாய்மை உணர்வுடன் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேர் உள்பட சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதற்காக உலக தமிழர்கள் அத்தனைபேரும், கண்ணீரால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மறப்பதும், மன்னிப்பதும் மனித மாண்பு.முதல் முறையாக தமிழன் தலை நிமிர்ந்து நிற்பதற்கான ஒரு முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார். இதற்காக ஒட்டு மொத்த தமிழர்களும் அவருக்கு உறுதுணையாக நிற்பார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

    உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரையும் விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

    இதையடுத்து ஜெயலலிதாவின் விடுதலை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் பாரதிராஜா தலைமையில் கூட்டம் நடந்தது.

    அக்கட்டத்தில் பாரதிராஜா பேசியதாவது...

    சரியான தீர்ப்பு சொல்லிய சதாசிவம்

    சரியான தீர்ப்பு சொல்லிய சதாசிவம்

    உலக நாடுகள் அனைத்தும் தூக்குத்தண்டனையை எதிர்க்கும் சூழ்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் மிக சரியான தீர்ப்பை சொல்லி இருக்கிறார்.

    தாய்மை உணர்வுடன் ஜெயலலிதா

    தாய்மை உணர்வுடன் ஜெயலலிதா

    குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் முடிவு என்று அவர் தீர்ப்பு கூறியதும் முதல்வர் ஜெயலலிதா தாய்மை உணர்வுடன் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேர் உள்பட சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

    கண்ணீரால் நன்றி தெரிவிப்போம்

    கண்ணீரால் நன்றி தெரிவிப்போம்

    இதற்காக உலக தமிழர்கள் அத்தனைபேரும், கண்ணீரால் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மறப்பதும், மன்னிப்பதும் மனித மாண்பு.

    முதல் முறையாக ஜெயலலிதா

    முதல் முறையாக ஜெயலலிதா

    முதல் முறையாக தமிழன் தலை நிமிர்ந்து நிற்பதற்கான ஒரு முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார். இதற்காக ஒட்டு மொத்த தமிழர்களும் அவருக்கு உறுதுணையாக நிற்பார்கள் என்றார்.

    வீரம் - விவேகத்துடன் கூடிய ஜெ. - சத்யராஜ்

    வீரம் - விவேகத்துடன் கூடிய ஜெ. - சத்யராஜ்

    நடிகர் சத்யராஜும் இக்கூட்டத்தில் பேசினார். அவர் கூறும்போது, தலைமை பதவியில் இருப்பவர்கள் வீரமும், விவேகமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வீரமும் விவேகமும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. இதற்காக தமிழ் திரையுலகம் முழு மூச்சாக ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நிற்கும் என்றார்.

    மனித நேய முடிவு - கேயார்

    மனித நேய முடிவு - கேயார்

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் பேசுகையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், மனித நேயத்துடன் முடிவெடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி.

    இதில் அரசியல் கிடையாது

    இதில் அரசியல் கிடையாது

    இதில் அரசியல் கிடையாது. எனவே தமிழ் திரையுலகை சார்ந்த நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது முதல்வருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.

    English summary
    We should thank chief minister Jayalalitha with tears for her motherly decision to release 7 convicts of Rajiv Gandhi murder case, said director Bharathiraja in a meeting held in Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X