For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குண்டு அனுஷ்கா... குமுறும் ரசிகர்கள் - ஒல்லி பெல்லிதான் வேண்டுமாம்

|
Anushka: ஒல்லியான அனுஷ்கா..மாதவனுக்கு ஜோடியானார்- வீடியோ

சென்னை: அனுஷ்காவின் குண்டான உடலைப் பார்த்து கடுப்பான ஆந்திர ரசிகர்கள், எங்களுக்கு ஒல்லியான அனுஷ்கா தான் வேண்டும், அப்படி இருந்தால் தான் பட வாய்ப்புகள் குவியும் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அனுஷ்கா என்ற பெயரில் சினிமாவில் ஜொலித்த ஸ்வீட்டீ ஷெட்டி (Sweety Shetty) பல திரைப்படங்களில் நடித்து தனது திறமையையும், கவர்ச்சியான உடல் வாகையும் வைத்து மாபெரும் வெற்றி பெற்றார். தனது வெற்றியை தக்க வைத்து கொள்ள பல முயற்சிகள் செய்து பாகுபலி எனும் ஒரு சகாப்தத்தில் விஸ்வரூபம் எடுத்தார்.

ஸ்லிம்மாக இருந்த போது வெரைட்டியான பல ரோல்களில் நடித்தார். இதனால், பல கதாபாத்திரங்கள் வந்து குவிந்தன. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி ஆகியோருடன் நடித்துள்ளார். அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அனுஷ்காவின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தின.

எப்ஐஆரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் மஞ்சிமா, ரைசா, ரெபா

குண்டான அனுஷ்கா

குண்டான அனுஷ்கா

அம்மன் வேஷம் இவருக்கு மிக கட்சிதமாக பொருந்தியது அதுமட்டுமல்லாமல், இவரது உயரம் பல ஹீரோக்களுக்கு பெரும் சவாலாகவே இருந்தது.

யோகா செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருந்த அனுஷ்கா ஆர்யா உடன் குண்டுத் தோற்றம் கொண்ட பெண்ணாக நடித்தார். அந்த உடம்பே செட்டாகி விட்டது. இதனால் பாகுபலி 2வது படம் நடிக்க படாத பாடு பட்டார். அதன்பின் பெரிய அளவில் படங்கள் எதுவும் கமிட் ஆகவில்லை.

பாகமதி

பாகமதி

கடைசியாக அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் வந்தது. அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லை. உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருந்ததால் அனுஷ்காவை இரு மொழிகளிலுமே ஒதுக்க தொடங்கினர். அனுஷ்காவிற்கு திருமணம் என்ற செய்திகளும் அவ்வப்போது வெளியாகி அதே வேகத்தோடு அமுங்கிப் போனது.

நிசப்தம்

நிசப்தம்

மீண்டும் கடும் உடற்பயிற்சிகள் செய்து எடை குறைந்து ஒல்லியான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதன்பிறகு நிசப்தம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். 4 இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் நடக்கும் கிரைம் திகில் படமாக தயாராகி உள்ளது.

அமெரிக்காவில் படப்பிடிப்பு

அமெரிக்காவில் படப்பிடிப்பு

அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. மாதவனுடன் அனுஷ்கா நடித்து தமிழில் வந்த ரெண்டு (Rendu) படமும் அதில் வந்த மொபைலா மொபைலா பாடலும் யாராலும் மறக்க முடியாது.

மீண்டும் குண்டு அனுஷ்கா

மீண்டும் குண்டு அனுஷ்கா

சமீபத்தில் மாதவனுடன் நிசப்தம் படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம் என்று அனுஷ்கா கூறி இருந்தார். இந்த நிலையில் அனுஷ்கா ஐதராபாத் விமான நிலையத்துக்கு வந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மீண்டும் உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருக்கிறார். உடற்பயிற்சிகளால் எடையை குறைக்க முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.

ஒல்லி பெல்லி வேண்டும்

ஒல்லி பெல்லி வேண்டும்

இப்புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆந்திர ரசிகர்கள் இப்படி குண்டாக இருந்தால் மறுபடியும் பட வாய்ப்பு வராது. நீங்கள் யோகா டீச்சர் போலவே எப்போதும் இருக்க வேண்டும். உங்கள் உயரத்துக்கு உங்கள் இடை அழகு அப்போது தான் வெளிப்படும் என்று பல கோரிக்கைகள் வைக்கின்றனர். அனுஷ்கா பிட்னெஸ் பற்றி அதிகம் அக்கறை உள்ளவர் தான். கண்டிப்பாக சீக்கிரம் ரசிகர் நெஞ்சம் மகிழ செய்வார் என்று நம்புவோம்.

English summary
Andhra fans who are looking at Anushka's plump body, have advised to her that we need lean Anushka only, so that the film's chances will increase.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more