Don't Miss!
- News
ஞானவாபி மசூதி விவகாரம்.. நீதிமன்றம் சென்ற முஸ்லீம் அமைப்பினர்! இன்று வாரணாசி கோர்டில் விசாரணை
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Finance
இன்று தங்கம் விலை எப்படியிருக்கு.. கூடிருக்கா.. குறைஞ்சிருக்கா..!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அமீருக்கு பிரியாணின்னா என்னன்னே தெரியாது.. அமீர் சீக்கிரம் வெளியே வந்தாபோதும்.. அஷ்ரஃப் உருக்கம்!
சென்னை: அமீர் வெற்றி பெற வேண்டாம் பழைய அமீராக வெளியே வந்தால் போதும் என்று அவரது கார்டியனான அஷ்ரஃப் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கோரியோகிராஃபர் அமீர், கடந்து வந்த பாதை டாஸ்க்கில் தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் கூறினார். மேலும் தன்னை குடும்பத்தில் ஒருவராக சேர்த்துக் கொண்ட அஷ்ரஃப் குடும்பத்தினர் குறித்தும் கூறினார்.
2021ல்
ஹிட்டான
டாப்
5
பெப்பியான
பாடல்கள்...
ஜாலியா
கேட்கலாம்,ஆடலாம்
பாடலாம்
ரகம்
அமீரின் கதையை கேட்ட ரசிகர்கள் வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டங்களை கண்ட அமீர், பிக்பாஸ் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் எப்போதும் பாவனி பின்னாலேயே சுற்றுவதா என விளாசி வருகின்றனர்.

விளையாட்டில் கவனம் செலுத்துங்கள்
பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் சக போட்டியாளர்களின் குடும்பத்தினரும் அம்மாவுக்காக பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் அம்மாவை நினைத்து மட்டும் விளையாடுங்கள், விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என்று கூறி வருகின்றனர்.

அதிருப்தியில் அஷ்ரஃப் குடும்பம்
சமூக வலைதளங்களிலும் அமீர் குறித்து நெகட்டிவ்வான கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் அமீரை வளர்த்து வரும் அஷ்ரஃப் குடும்பத்தினர் அதிருப்தியில் உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் அமீரின் நடவடிக்கையால் மிகுந்த கவலையடைந்துள்ளனர் அஷ்ரஃப் குடும்பத்தினர். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அஷ்ரஃப் தனக்கும் அமீருக்குமான அறிமுகம் முதல் தற்போது வரை உள்ள உறவு குறித்து கூறியுள்ளார்.

மயங்கி விழுந்தான்..
அஷ்ரஃப் தனது பேட்டியில் பேசியிருப்பதாவது, என் வீட்டு மாடியில் தான் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டுக்காக நடனமாடினான். அவன் வெற்றி பெற்றான், அப்போது மயங்கி விழுந்தான். மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்கள். பின்னர் அவன் வீட்டிற்கு சென்றேன். ஓலை குடிசையில் ஒரே ஒரு கட்டில் போட்டிருந்தது. அந்த அறைக்குள் தான் டான்ஸ் பயிற்சி செய்துள்ளான்.

ரொம்ப கஷ்டத்த பார்த்திருக்கான்
அமீர் ஓரிரண்டு வயதிலேயே அப்பாவ இழந்துட்டான். அமீரோட அம்மாவும் இறந்துட்டாங்க. அமீருக்கு ஒரு அண்ணன் இருக்கான். அவனை விட்டா அமீருக்கு வேற யாரும் இல்லை. ரொம்ப தனிமையில் இருந்தான். ரொம்ப கஷ்டத்த பார்த்திருக்கான். கூலி வேலைக்குதான் போய்க்கொண்டிருந்தான். கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தில் ஊட்டி ஆர்ட்ஸ் காலேஜ்ஜில் டிஃபென்ஸ் படித்துள்ளான்.

கறி சாப்பாடுன்னா என்ன?
அப்போதான் டான்ஸ்ல இன்ட்ரெஸ்ட் வருது. டிஃபென்ஸுக்கு போகாம, அம்மாவின் ஆசைக்காக டான்ஸர் ஆகி உள்ளான். அப்படியே குழந்தைகளுக்கு டான்ஸ் சொல்லி கொடுத்தான். கறின்னா என்ன? கறி சாப்பாடுன்னா என்ன? கோழின்னா என்னன்னே அமீருக்கு தெரியாது. அதையெல்லாம் அவன் சாப்பிட்டதே இல்லை.

என் வீட்டில் தான் பிரியாணி சாப்பிட்டான்
பிரியாணின்னா என்னன்னு அமீர் தெரிந்து கொண்டதே என் வீட்டில்தான். என் வீட்டில் சாப்பிட்ட பிரியானி தான் அவன் முதலில் சாப்பிட்ட பிரியாணி. அவன் சாப்பிடுவதில் எனக்கு ஒரு திருப்தி. டான்ஸ் கிளாஸ் நடத்திட்டு இருந்ததை பார்த்து அவனை ஊக்கப்படுத்தலாம் என்று ஒரு இடத்தை லீஸுக்கு எடுத்து டான்ஸ் கிளாஸை ஆரம்பித்தோம்.

ரொம்ப நொந்து போயிட்டான்
நான் செலவு செய்து அமைத்து கொடுத்தேன். ஆனால் 6 மாதங்களில் அதை காலி பண்ண சொல்லிட்டாங்க. இதனால் ரொம்ப நொந்து போயிட்டான். அமீரை நானே வைத்துக்கொண்டேன். இந்த வாய்ப்பு கிடைத்ததும் என்னிடம் கூறினான். இது பெரிய கோல்டன் வாய்ப்பு என்று அவனை தைரியப்படுத்தி அனுப்பி வைத்தேன்.

எங்கள் அமீர் இல்லை
இப்போ இருக்கும் அமீர் எங்கள் அமீர் இல்லை. உள்ளே இருக்கம் மைண்ட் கேம் எனக்கு புரியவில்லை. ஒவ்வொரு க்ளிப்பும் மாறிக்கொண்டே இருக்கிறது. அமீர் லவ் பண்ற கேரக்டர் கிடையாது. அவன் ஒரு இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறான். அவனை கல்யாணம் பண்ணிக்குமாறு கூறினேன். அது என்னுடைய கடமையாகதான் நான் நினைத்து கொண்டிருக்கிறேன்.

ஐடியாவே இல்லை என்றான்
உனக்கு யாரையாவது பிடித்திருந்தால் சொல் என்று கூறியிருக்கிறேன். அல்லது நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறேன். ஆனால் தனக்கு அப்படி ஒரு ஐடியாவே இல்லை என்று கூறிவிட்டான். என் லட்சியத்தை அடையாமல், வேறு எதிலும் என்னால் கவனம் செலுத்த முடியாது என்று என்னிடம் கூறிவிட்டான். உனக்கு யாரையாவது பிடித்திருந்தால் சொல் என்று கூறியிருக்கிறேன். அல்லது நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறேன். ஆனால் தனக்கு அப்படி ஒரு ஐடியாவே இல்லை என்று கூறிவிட்டான். என் லட்சியத்தை அடையாமல், வேறு எதிலும் என்னால் கவனம் செலுத்த முடியாது என்று என்னிடம் கூறிவிட்டான்.

என் மனைவி அழுது கொண்டே இருக்கிறார்
ஆனால் இப்போது நடப்பதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது. இவன் வெளியே வந்தால் போதும் என்று இருக்கிறது. எங்களுக்கு எங்களின் பழைய அமீர் வேண்டும். அந்த பிக்பாஸ்க்குள்ள இருக்க அமீர் எங்களுக்கு வேண்டாம். அமீரின் நடவடிக்கையால் என் மனைவியும் அப்செட்டில் இருக்கிறார். மூன்று நாட்களாக அழுது கொண்டேதான் இருக்கிறார்.. என்று கூறியுள்ளார்.