கல்யாணத்திற்கு முன்பே பர்ஸ்ட் நைட் முடிஞ்சிடுச்சி.. சம்யுக்தா பொய் சொல்கிறார்.. விஷ்ணுகாந்த் பளீச்!
சென்னை : கல்யாணத்திற்கு முன்னாடியே பர்ஸ்ட் நைட் முடிந்துவிட்டது என சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் கூறியுள்ளார்.
சீரியல் நடிகை சம்யுக்தாவும், நடிகர் விஷ்ணுகாந்துக்கும் உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் ஆன ஒரே மாதத்தில் பிரிந்து ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான புகார்களை கூறி வருகின்றனர்.

பிரிந்தனர் : சீரியல் நடிகை சம்யுக்தாவும், சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தும் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, நடிகை சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த புகைப்படத்தை டெலிட் செய்து விட்டார். இருவரும் ஒரே மாதம் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் பிரியப்போவதாக சம்யுக்தா இன்ஸ்டா நேரலையில் பேசி இருந்தார்.
கடுப்பான சம்யுக்தா : இதையடுத்து,விஷ்ணுகாந்த், சம்யுக்தாவிற்கு திருமணத்திற்கு பின் விஜே ரவி மற்றும் ஹரியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததற்கான ஆதாரத்தையும், ஆடியோவையும் வெளியிட்டு இருந்தார். விஷ்ணுகாந்த் ஆதாரத்தை வெளியிட்டதால் டென்ஷன் ஆன சம்யுக்தா அப்பா மற்றும் அம்மாவுடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அந்த விஷயத்தில் மோசம் : அதில், விஷ்ணுகாந்துக்கு 24 மணிநேரமும் அந்த நினைப்பு தான் என்றும் ஆபாச வீடியோவை காட்டி, அதில் செய்வது போல செய்ய சொல்லுவார். வலி தாங்க முடியாம நான் கத்தினால் அடிப்பார் என்று கண்ணீருடன் பேசியிருந்தார். செக்ஸ் விஷயத்தில் இவர் ரொம்ப மோசமானவர் என்பது தெரிந்து இருந்தால் திருமணமே செய்து கொண்டு இருக்க மாட்டேன் என்று அந்த பேட்டியில் சம்யுக்தா கூறியிருந்தார்.

எல்லாமே பொய் : சம்யுக்தாவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த விஷ்ணுகாந்த், சம்யுக்தா சொல்வது எல்லாமே பொய், திருமண புடவை விஷயத்தில் தான் எங்களுக்குள் பிரச்சனை வந்தது, அதற்கு முன்பு வரை எந்த பிரச்சனையும் இல்லை. நான் தற்போது ஆதாரத்தை வெளியிட்டு விட்டதால், சம்யுக்தாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் என் மீது இப்படி பழி சுமத்துகிறார்.
திருமணத்திற்கு முன்பே : ரவி தவறாக நடந்து கொண்டதால் அவரை விட்டு விலகியதாக என்னிடம் கூறியிருந்தார். நான் கணவன் என்பதால் பாலியல் ரீதியாக குற்றம் சாட்டுகிறார். திருமணத்திற்கு முன் சம்யுக்தா என் வீட்டுக்கு வந்துள்ளார். அது மட்டுமில்லாமல் திருமணத்திற்கு முன்பே நாங்கள் இருவரும் உடல்ரீதியாக சேர்ந்து விட்டோம். அப்போதே நான் எவ்வளவு மோசமானவன் என்பது தெரியாதா என விஷ்ணுகாந்த் அடுக்கடுக்கான கேள்வியை கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











