twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உங்களுக்கு மட்டும் தான் கோபம் வருமா, எங்களுக்கும் வரும்: உதயநிதி ஸ்டாலின்

    By Siva
    |

    Recommended Video

    உச்சகட்ட கோவத்தில் உதயநிதி ஸ்டாலின் - வீடியோ

    சென்னை: உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் கோபம் வரும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தினேஷ் மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள ஒரு குப்பை கதையை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மூலம் தயாரித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,

    குருவி

    குருவி

    ரெட் ஜெயிண்ட் மூவிஸ் துவங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இளைய தளபதி விஜய் நடித்த குருவி படத்தை தான் முதன்முதலில் தயாரித்தேன். நிறைய படங்கள், நிறைய ஹிட் படங்கள், நிறைய ஆவரேஜ் படங்கள், கொஞ்சம் மட்டமான படங்கள் கொடுத்துள்ளோம். இந்த பத்து ஆண்டுகள் நாங்கள் இருக்க அப்பப்போ நல்ல படங்கள் அமைந்துவிடும். அதில் இந்த படம் கண்டிப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

    சந்தானம்

    சந்தானம்

    எப்படி நான் ஒரு கல் ஒரு கண்ணாடி துவங்கி சந்தானத்துடன் பண்ணினேன். அது போன்று தான் தினேஷ் மாஸ்டருடனும். எல்லோரும் என்னை கிண்டலடிப்பார்கள். சந்தானம் சார் ஹீரோ இவர் அவருடைய நண்பராக நடிப்பார், அதனால் அப்படியே ஓடிக்கிட்டு இருக்கு என்றார்கள். என் முதல் மூன்று படங்களிலுமே தினேஷ் மாஸ்டர் தான் டான்ஸ் சொல்லிக் கொடுத்தார்.

    மாஸ்டர்

    மாஸ்டர்

    பாட்டு இருக்கட்டும் முதலில் டான்ஸ் மாஸ்டரை கேட்டு வாங்குங்கப்பா என்பேன். அந்த அளவுக்கு அவருடன் வேலை செய்வதில் சவுகரியம். மாஸ்டரின் உதவியாளர்கள் எல்லாம் என்னை திட்ட முடியாமல் அவரை திட்டியிருக்கிறார்கள். நானும், மாஸ்டரும் அண்ணன், தம்பி போன்று தான் பழகுவோம்.

    பாடல்

    பாடல்

    ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் அழகே அழகே பாடல் ஜோர்டானுக்கு சென்று ரிஹர்சல் செய்து எடுத்தோம். நான் சோம்பேறித்தனமாக இருந்தாலும் மாஸ்டர் என் அறைக்கே வந்து சார் ஒரு அரை மணிநேரம் ரிஹர்சல் செய்யலாம் என்று கூறுவார். மற்றொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது இங்க பாருங்க மாஸ்டர் பவர் ஸ்டார் பல ஹீரோக்களை கிண்டல் செய்து ஆடியிருக்கிறார், என் மாதிரி கூட ஆடியிருக்கிறார் என்றேன். அதற்கு மாஸ்டரோ, சாரி சார் நான் தான் அந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் என்றார். நான் அதை மறக்கவே மாட்டேன்.

    வரவேற்பு

    வரவேற்பு

    நல்ல படங்களுக்கு வரவேற்பு கொடுங்க. தப்பான படங்கள் எடுக்கும்போது எங்களை திட்டுகிறீர்கள், கோபித்துக் கொள்கிறீரகள், கழுவி ஊத்துகிறீர்கள். அதே மாதிரி நாங்கள் நல்ல படங்களை எடுக்கும்போது நீங்கள் வரவேற்பு கொடுக்கவில்லை என்றால் எங்களுக்கும் அதே கோபம் வரும். ஏன் இந்த மாதிரி நல்ல படங்கள் எடுக்கணும் என்று கோபம் வரும். அதற்கான ஒரு வேண்டுகோள் தான். மைனா படம் போன்ற ஒரு தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தியது. எல்லா ஹீரோக்களும் இது போன்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்றார் உதயநிதி ஸ்டாலின்.

    English summary
    Producer turned actor Udhayanidhi Stalin said that they will also get angry when audience don't support good movies. He said so at the audio launch of Oru Kuppai Kathai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X