twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா நோய் தொற்று... சென்னையிலும் சினிமா தியேட்டர்கள் மூடப்படுகிறதா?

    By
    |

    சென்னை: கொரோனா நோய் தொற்று காரணமாக, சென்னை தியேட்டர்கள் மூடப்படுவது குறித்து இன்று முடிவெடுக்கப்படுகிறது.

    Recommended Video

    கொரனோ வைரஸ் இந்தியா வந்ததற்கு வாழ்த்து சொல்லிய நடிகை.. வைரலாகும் வீடியோ

    கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த நோய் தொற்று எளிதில் பரவும் என்பதால், பல்வேறு நாடுகளில், தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டுள்ளன.

    இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் உட்பட முக்கிய நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

     'பாப்பா, உங்களை மாதிரியே இருக்கு...' தனது 2 மாதக் குழந்தையின் போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகை! 'பாப்பா, உங்களை மாதிரியே இருக்கு...' தனது 2 மாதக் குழந்தையின் போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகை!

    தியேட்டர்கள் மூடப்படும்

    தியேட்டர்கள் மூடப்படும்

    கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த மாதம் இறுதிவரை தியேட்டர்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

    மோகன்லாலில் மரைக்காயர் அரபிகடலின் சிங்கம் உட்பட சில படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வடமாநிலங்களில் நடக்க இருந்தது. இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு

    தமிழக அரசு

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ஷூட்டிங், ரஷ்யாவின் நடந்து வந்தது. கொரோனா காரணமாக பாதியிலேயே இந்தியா திரும்புவதாக, இயக்குநர் அஜய் ஞானமுத்து, தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் உள்ள சினிமா தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    படங்களுக்கு சிக்கல்

    படங்களுக்கு சிக்கல்

    அரசின் இந்த உத்தரவால், இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டிருந்த படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களுக்கும் கூட்டம் அதிகமாக வரவில்லை. தியேட்டர்களில் கூட்டம் குறைந்து இருப்பதால், தியேட்டர் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள், பெரும் நஷ்டத்தைச் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    சென்னை தியேட்டர்கள்

    சென்னை தியேட்டர்கள்

    இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை மூடுவது குறித்து இன்று முடிவெடுக்கப் பட இருக்கிறது. இதுபற்றி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறும்போது, அரசு உத்தரவால், எல்லோயோர மாவட்டங்களில் உள்ள தியேட்டர்கள் மூடப்படும். சென்னையில் உள்ள தியேட்டர்கள் மூடப்படுவது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu theatre association secretary Panneerselvam said, the decision to close the theaters in Chennai will be taken today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X