கொரோனா பயம்.. குழப்பம்… நிச்சயம் மீண்டு வருவோம்... ஸ்ருஷ்டி டாங்கே நம்பிக்கை !
சென்னை : நேற்று பிறந்த நாளை கொண்டாய ஸ்ருஷ்டி டாங்கே, வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு வீடியோ மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த துயரமான நேரத்திலும் என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி, நாம் அனைவரும் இந்த கடுமையான சூழ்நிலையிலிருந்து மீண்டுவருவோம் என்று ஸ்ருதிடி டாங்கே கூறியுள்ளார்.
அதுவரை அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் , வீட்டில் இருங்கள் என்று கூறியுளளார்.

கன்னக்குழி அழகி
நடிகை லைலாவை தொடர்ந்து கன்னக்குழி அழகுக்கு பெயர் போனவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. யுத்தம் செய் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இவர் அறிமுகமானார். இவர் இப்பொழுது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என செம பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.

ரசிகர்கள் கூட்டம்
இவரின் நடிப்பில் வெளியான மேகா, டார்லிங், மற்றும் வில் அம்பு உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு சிறந்த நடிகை என்ற பெயரை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத்தந்துள்ளது. நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய ஸ்ருஷ்டி டாங்கேக்கு ரசிகர்கள் பலர் இணையத்தின் வழியாக வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

அனைவருக்கும் நன்றி
இந்நிலையில் ,பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி, இந்த சூழ்நிலையில் நான் என் பிறந்த நாளை நான் கொண்டாட வில்லை. நாம் மோசமான நிலையில் இருக்கிறோம், குழப்பம், அச்சம் எல்லாம் நம்மை சூழ்ந்துள்ளது. ஆனால் இந்த நிலை மாறும் என்று நாம் நம்புவோம். அனைவரிடத்திலும் கை குலுக்கி சூரிய ஒளியை வரவேற்கும் நாள் மிக விரைவில் உள்ளது. சோர்த்து போகாதீர்கள் அனைவரிடத்திலும் அன்பாக இருங்கள் என்று கூறினார்.
Felt like to share it 🙏🏻 pic.twitter.com/30ug1COHJF
— S r u s h t i i D a n g e (srushtiDange) May 26, 2021
பாதுகாப்பாக இருங்கள்
மேலும், பேசிய அவர், இந்த சூழ்நிலையிலும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வீட்டில் இருங்கள் பாதுகாப்பாக இருங்கள், மாஸ்க் போடுங்கள், கட்டாயம் தடுப்பூசி போடுங்கள் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











