twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தட் ஹவ் டூ ஐ நோ சார், பின்னாடி முன்னாடி என்ன இருந்தது: கிரேஸி மோகனின் 'தெறி' வசனங்கள்

    By Siva
    |

    சென்னை: நடிகரும், வசனகர்த்தாவும், நாடக எழுத்தாளருமான கிரேஸி மோகன் காலமான செய்தி அறிந்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இன்றைய நாள் சினிமா மற்றும் நாடக ரசிகர்களுக்கு மோசமான நாள் என்றே கூற வேண்டும். இன்று காலை பிரபல நடிகரும், நாடக ஆசிரியரும், இயக்குநருமான கிரிஷ் கர்னாட் காலமானார்.

    இந்நிலையில் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும், நாடக எழுத்தாளரும், கதை-வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2 மணி அளவில் உயிர் இழந்தார். இதையடுத்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    சதிலீலாவதி, தெனாலி, காதலா காதலா, .. கமலின் பல படங்களை ரிப்பீட் மோடில் பார்க்க வைத்தவர் கிரேஸி மோகன்! சதிலீலாவதி, தெனாலி, காதலா காதலா, .. கமலின் பல படங்களை ரிப்பீட் மோடில் பார்க்க வைத்தவர் கிரேஸி மோகன்!

    ரசிகர்கள்

    ஒரே நாளில் இரண்டு ஜாம்பவான்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்தது நாடகம் மற்றும் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக எங்களை சிரிக்க வைத்தவர் இன்று இல்லையே என்று 80ஸ், 90ஸ் கிட்ஸ் எல்லாம் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இரட்டை அர்த்த வசனம், ஆபாசம் என்றால் என்னவென்றே தெரியாதவர் கிரேஸி மோகன். 60 வயது நபரும், 10 வயது குழந்தையும் சேர்ந்து அமர்ந்து அவரின் காமெடியை பார்த்து சிரிக்கலாம் என்கிறார்கள் ரசிகர்கள்.

    டாக்டர் மார்கபந்து

    டாக்டர் மார்கபந்து

    கமல் ஹாஸனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் கிரேஸி மோகன் டாக்டர் மார்கபந்துவாக நடித்து நம்மை எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க வைத்ததை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கத் தான் முடியுமா. பிரகாஷ் ராஜ் என்ன கேள்வி கேட்டாலும் That how do I know sir? என்று கிரேஸி மோகன் பதில் அளித்தது தான் மறக்குமா?. உங்களை மிஸ் பண்ணுவோம் மார்கபந்து.

    பின்னாடி

    பஞ்சதந்திரம் படத்தில் கிரேஸ் மோகன் எழுதிய வசனங்கள் தான் ஹைலைட். முன்னாடி பின்னாடி என்ன இருக்குது, பின்னாடி வந்து முன்னாடி இருந்தது ஆனால் இப்போ அது இல்லை, முன்னாடி பின்னாடி என்ன இருந்தது என்று காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் சிரிக்கலாம். கிரேஸி மோகன் மறைந்தாலும் அவர் தனது வசனங்களால் நம்மை தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்.

    காமெடி

    மக்களை சிரிக்க வைப்பது லேசான காரியம் இல்லை. அதையே அசால்டாக செய்தவர் கிரேஸி மோகன். அவர் வசனம் எழுதும் விதமே தனி. காமெடி வசனம் எழுதுவதில் கிரேஸி மோகனுக்கு நிகர் கிரேஸி மோகன் தான். படங்கள் மட்டும் அல்ல நாடகங்களிலும் அவர் வழி தனி வழி. இது போன்ற படைப்பாளிகளை பார்ப்பது அரிது.

    English summary
    Fans couldn't accept the fact that actor, playwright Crazy Mohan is no more.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X