twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    10% வரியை ரத்து செய்யலைனா, வரும் 27 முதல் புதுப்படங்களை விநியோகிக்க மாட்டோம்: டி.ராஜேந்தர்

    By
    |

    சென்னை: பத்து சதவிகித வரியை ரத்து செய்யாவிட்டால், வரும் 27 ஆம் தேதி முதல் புதிய படங்களை விநியோகிக்க மாட்டோம் என்று தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பு நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    we will not distribute new films from 27th March: T.Rajendar

    அப்போது, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் பேசினார்.

    அவர் கூறும்போது, விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகிப்பதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் பத்து சதவிகித டிடிஎஸ் வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, ஒரு முடிவை எடுத்துள்ளோம்.

    அதன்படி இந்த மாதம் 27ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம். இந்த முடிவு விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் டிடிஎஸ் வரியை நீக்கும் வரை நடைமுறையில் இருக்கும். தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான ஜிஎஸ்டி (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 8% சதவிகித கேளிக்கை வரி செலுத்தப்படுகிறது.

    இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. தனால், அந்த 8% கேளிக்கை வரியை, முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம் என்றார். இந்த நிகழ்ச்சியில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் மன்னன், கோவை மாவட்ட விநியோஸ்தர்கள் சங்க தலைவர் ராஜமன்னார், திருநெல்வேலி மாவட்ட விநியோஸ்தர்கள் சங்க உப தலைவர் பிரதாப் ராஜா, மதுரை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் சாகுல் அமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    English summary
    Distributors association leader T.Rajendar said, 'If govt will not cancel the 10% TDS, we won't distribute new films from 27th March'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X