twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுட்டுத்தான் பாருங்களேன்.. நவம்பர்ல இருக்கு கச்சேரி.. டிரம்புக்கு பதிலடி கொடுத்த டெய்லர் ஸ்விஃப்ட்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜார்ஜ் ஃப்ளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு மினிசோட்டா நகரில் போராட்டம் வெடித்துள்ள நிலையில், அதிபர் டிரம்ப் போட்ட டிவீட்டுக்கு டெய்லர் ஸ்விஃப்ட் பதிலடி கொடுத்துள்ளார்.

    பிரபல அமெரிக்க பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட், சமீப காலமாக அரசியல் ரீதியாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

    கடந்த மே 25ம் தேதி ஜார்ஜ் ஃப்ளாய்டு போலீசாரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வீடியோவை பார்த்து இவரும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    கலவரம்

    கலவரம்

    நிற பிரச்சனை காரணமாக ஜார்ஜ் ஃப்ளாய்டு என்பவர் கொல்லப்பட்டதாகவும், அவரது மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் தொடங்கிய போராட்டம் தற்போது மினிசோட்டா நகரில் கலவரமாக வெடித்து இருக்கிறது. பொது வெளியில், கருப்பின மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு போலீசாருக்கும், டிரம்ப் அரசுக்கு எதிராகவும் முழக்கங்களையும், கல்லெறியும் சம்பவங்களையும், வாகனங்களுக்கு தீ வைத்தும் வருகின்றனர்.

    சுட்டுடுவேன்

    சுட்டுடுவேன்

    அதிகரித்து வரும் இந்த போராட்டத்தை பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கவர்னர் டிம் வால்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அந்த நகரத்தின் பாதுகாப்பாக ராணுவத்தை அனுப்பவும் தயார் எனக் கூறியுள்ளேன். பொது அமைதியை கெடுக்கும் வகையில் போராட்டங்கள் இதே போன்று தொடர்ந்தால், கண்ட இடத்தில் போராட்டக்காரர்களை சுட உத்தரவு பிறப்பிப்பேன் என பதிவிட்டு இருந்தார்.

    டிவிட்டர் கண்டனம்

    டிவிட்டர் கண்டனம்

    அதிபர் டிரம்பின் இந்த டிவீட்டை பார்த்த பல பிரபலங்களும் அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். டிவிட்டர் நிர்வாகத்திடமும் நெட்டிசன்கள் பலர், டிரம்பின் டிவீட் வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக குற்றம் சாட்டிய நிலையில், டிரம்ப் டிவிட்டை நீக்க டிவிட்டர் நிர்வாகமும் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

    நவம்பர் வரட்டும்

    இந்நிலையில், பிரபல அமெரிக்க பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட், சுட்டுடுவீங்களா, சுட்டுத்தான் பாருங்க, வரும் நவம்பர் மாதம் வரும் தேர்தலில் உங்களுக்கு எதிராக ஓட்டு போட்டு உங்களை வெள்ளை மாளிகையில் இருந்து வீட்டுக்கு அனுப்புகிறோம் என படு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

    English summary
    Taylor Swift blasts American President Donald Trump for his ‘Shooting’ tweet against the protestor, who protest for the death of George Floyd.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X