நாம இன்னும் பாக்காத அந்த நாலு பேரு...!! யாருன்னு பாருங்க.. தீயாய் பரவும் மீம்!

சென்னை: நாம இன்னும் பார்க்காத நாலு பேரு என்று மீம் ஒன்று சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

பல சீரியஸான விஷயங்களையும் படு ஜாலியாக வெளிப்படுத்தி வருகின்றன மீம்ஸ். அசத்தல் போட்டோ டைமிங் டயலாக் என அதற்கென ஒரு டீமாக வேலை செய்து வருகிறார்கள்.

எவ்வளவு சென்ஸிட்டிவான விஷயத்தையும் ஒரே ஒரு போட்டோவையும் நச் டயலாக்கையும் போட்டு குபீரென சிரிக்க வைத்து விடுகின்றனர்.

முக்கிய நிகழ்வுகள்

முக்கிய நிகழ்வுகள்

பாகுபலி முதல் அரசியல்வாதிகள் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. தேர்தல் நேரங்களில் அரசியல் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் தெறிக்கவிடும். இதேபோல் என்ன முக்கிய நிகழ்வுகள் என்றாலும் அதுதொடர்பான மீம்ஸ்கள் வைரலாவது வாடிக்கையாகிவிட்டது.

லாக்டவுன் டைம்பாஸ்

லாக்டவுன் டைம்பாஸ்

தேவையான விஷயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் தேவையில்லாத சில விஷயங்கள் குறித்தும் அவ்வப்போது காமெடியாக மீம்ஸ் வெளியிட்டு டைம்பாஸ் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த லாக்டவுன் நேரத்தில் கொரோனா வைரஸை வச்சு செய்தனர்.

சுயம்புலிங்கம் தென்காசி

சுயம்புலிங்கம் தென்காசி

கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி பாபநாசம் படத்தின் ஒரு காட்சியை வெளியிட்டு, ஆகஸ்ட் 2.. சுயம்புலிங்கம் குடும்பத்தோட தென்காசிக்கு சென்ற நாள் என கூறி மீம்ஸ் வெளியிட்டனர். அந்த மீம் சமூக வலைதளத்தில் வைரலானது.

அந்த நாலு பேரு

அந்த நாலு பேரு

இந்நிலையில் இன்று, இன்னும் நாம் பார்க்காத அந்த நாலு பேரு.. என்று ஒரு மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதில் அந்த நாலு பேரு என, கரகாட்டகாரன் படத்தில் உச்சரிக்கப்பட்ட சொப்பன சுந்தரி, அடுத்து கிரி படத்தில் இடம்பெற்ற வீராபாகு அக்கா, வேலையில்லா பட்டதாரி படத்தில் போனிலேயே பேசி சென்ற தங்கபுஷ்பம் மற்றும் 96 படத்தில் ஜானுவின் கணவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பெயிண்டர் கோவாலு..

பெயிண்டர் கோவாலு..

இந்த மீம்ஸை பார்த்த நெட்டிசன்கள், இன்னும் சில பார்க்காத கேரக்டர்களின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். அதாவது சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற பெயிண்டர் கோவாலு.. அழகன் படத்தில் இடம்பெற்ற நடிகர் மம்முட்டியின் முதல் மனைவி என கூறி வருகின்றனர்.

ஆடுகளம் நாகவள்ளி

ஆடுகளம் நாகவள்ளி

மேலும் மைனா படத்தில் தம்பி ராமையா மனைவி, துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடிகர் விஜயின் அம்மா, ஆடுகளம் நாகவள்ளி என பலரின் பெயர்களையும் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த மீம் தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X