This week theatre release: இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: this week theatre release (இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படம்) கடந்த வாரம் தியேட்டரில் சந்தானம் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படமும், ஹரீஷ் கல்யாண் நடித்த எல்ஜிஎம் திரைப்படங்கள் வெளியானது.

இதில் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் சந்தானத்திற்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால், இப்படம் வசூலை அள்ளி வருகிறது.

Web and Vikram Rathod this week theatre release movies list

இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.

வெப்: அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வெப். இப்படத்தில் நட்டி நட்ராஜ், ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மேலும், மொட்டை ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியாக உள்ளது.

Web and Vikram Rathod this week theatre release movies list

சான்றிதழ்: மதுரை சம்பவம் திரைப்படத்தில் நடித்த ஹரிகுமார் சான்றிதழ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கருவரை கிராமம் ஒரு சிறந்த கிராமத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இதைக் கவனித்த அரசு அந்த கிராமத்திற்கு விருதை அறிவிக்கிறது. ஆனால், கிராம மக்கள் அந்த விருதை மறுத்ததால், கிராம மக்களுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. கிராமத்து பின்னணி கொண்ட இத்திரைப்படம் ஆகஸ்ட் 4ந் தேதி வெளியாக உள்ளது.

விக்ரம் ரத்தோட்(தெலுங்கு): விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் தெலுங்கில் பிச்சகடு 2 பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இந்த படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களின் பிடித்த நடிகராக விஜய் ஆண்டனி மாறி உள்ளதால், அவரது தமிழரசன் திரைப்படம் தெலுங்கில் விக்ரம் ரத்தோட் என்ற பெயரில் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

Web and Vikram Rathod this week theatre release movies list

நிலா(மலையாளம்): இயக்குநர் இந்து லட்சுமி இயக்கத்தில் சாந்தி கிருஷ்ணா,வினீத் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் நிலா. படுக்கையில் இருக்கும் தாய் மற்றும் அவரது மகனை சுற்றி நடக்கும் ஒரு மர்மமான திரைப்படமாகும். இப்படம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X