சினிமாவைத் தொடர்ந்து வெப் சீரீஸிலும் வந்தாச்சு 2.0 க்கள்

சென்னை: சினிமாவைத் தொடர்ந்து வெப் சீரீஸிலும் 2.0க்கள் வரத் தொடங்கியுள்ளன.

ஹாலிவுட், பாலிவுட் தொடங்கி தற்போது கோலிவுட்டிலும் பார்ட் 2 படங்கள் அதிக அளவில் வெளியாகி வருகின்றன. படங்களைத் தொடர்ந்து சரவணன், மீனாட்சி தொடர் மூலம் சீரியலில் 2-ம் பாகத்தை தொடங்கி வைத்த செந்தில்-ஸ்ரீஜா ஜோடி, தற்போது வெப் சீரிசிலும் அதை தொடங்கியுள்ளது. சினிமாவுக்கு அடுத்தபடியாக வெப் சீரிஸ்களில் நடிப்பதை திரை நட்சத்திரங்கள் பெரிதும் விரும்புகின்றனர். பாபி சிம்ஹா, பிரசன்னா உட்பட பல நடிகர்கள் வெப் சீரிஸ்களில் ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர்.

 Web series also comes in 2.0 version

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான ஜோடியான செந்தில்-ஸ்ரீஜா ஜோடி அதன் பின், அதே விஜய் டிவியில் மாப்பிள்ளை என்ற சீரியலில் நடித்தனர். மாப்பிள்ளை சீரியலுக்கு பின் 'கல்யாணம் கண்டிசன் அப்ளை' என்ற வெப் சீரியலில் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த தொடரி்ன் வெற்றியைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது.

 Web series also comes in 2.0 version

'கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0'. என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இத்தொடரை 'மிர்ச்சி பிளே ஒரிஜினல்' தயாரிக்க, இயக்குனர் ஜஸ்வினி இயக்கியிருக்கிறார்.

கடந்த 22-ஆம் தேதி MX பிளயேரில் ஒளிபரப்பப்பட்ட இந்த தொடரில் 6 ஆறு எபிசொடுகள் இடம் பெற்றுள்ளன. முதல் பாகத்தை போன்றே 2-ம் பாகமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

 Web series also comes in 2.0 version

ஒரு வித்தியாசமான பரிமாணத்தில் கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு பார்ப்போம். டெஸ்ட் ஒரு நாள் போட்டி & டி -20 என காலத்திற்கு ஏற்றார்போல் கிரிக்கெட் சுருங்கியது போல், சினிமா சுருங்கி வெப் சீரிஸ் என்ற புதிய பரிமாணம் எடுத்துள்ளது. சினிமாவில் 2-ம் பாகம் வெளியான பின்னர் அதே போன்று நிறைய படங்கள் வந்த வரிசையில் இனி நிறைய வெப் சீரிசின் 2-ம் பாகங்களை எதிர் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X