இளம் நடிகைக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை.. 'வெப் சீரிஸ்' இயக்குனர் அதிரடி கைது!
சென்னை: நடிகையிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, வெப் சீரிஸ் இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுமலைபேட்டையைச் சேர்ந்தவர் ரஞ்சித் (25). சோழிங்கநல்லுாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி இருந்தார்.
இவர் அக்கரை பகுதியில் வெப் சீரியல் ஒன்றின் படப்பிடிப்பை நடத்தி வந்தார்.

நட்பாகப் பழகினர்
இந்த வெப்சீரிஸுக்கு 'மூன்று பேர்' என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த, 25 வயது நடிகை, கதாநாயகியாக நடித்தார். இவர், பல குறும்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். மூன்று பேர் என்ற வெப்சீரிஸில் நடித்தபோது அந்த நடிகையும், ரஞ்சித்தும் நட்பாகப் பழகி வந்துள்ளனர்.

பாலியல் தொல்லை
இந்நிலையில், ரஞ்சித் அந்த நடிகையிடம் தன்னை காதலிக்குமாறு கூறினாராம். அதற்கு அவர் மறுத்து வந்தாராம். இதையடுத்து அவருக்கு பாலியல் தொல்லையும் கொடுத்தாராம். இதை அந்த நடிகை பலமுறை கண்டித்துள்ளார். இருந்தும் அவர் கேட்காமல் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

உதவி இயக்குனர்
இதனால் மனமுடைந்த அந்த நடிகை, கானாத்துர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் வேலு, இயக்குனர் ரஞ்சித்தையும் அவர் படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய இரண்டு பேரையும் அழைத்து இது தொடர்பாக விசாரித்தார்.

சிறையில் அடைப்பு
அதில், அந்த நடிகைக்கு ரஞ்சித் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உறுதியானது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் வெப்சீரிஸ் இயக்குனர் ரஞ்சித்தை கைது செய்த போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


Click it and Unblock the Notifications











