வசமா மாட்டிக்கிட்டார்.. அந்த நடிகையை போலவே இவரையும் ஓரங்கட்ட முடிவாம்.. சிக்கலில் சமத்து நடிகை!

சென்னை: ஏற்கனவே கோலிவுட்டில் சமத்து நடிகைக்கு பட வாய்ப்புகளே கிடைக்காமல் இருக்கிறது.

இந்நிலையில், புதிய தளத்தில் நுழைய போகிறேன் என பாலிவுட்டுக்கு போன அவருக்கு தற்போது மிகப்பெரிய சிக்கல் உருவாகி உள்ளதாம்.

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவருக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், பால் நடிகையை போலவே இவரையும் ஓரங்கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

படங்கள் ஓடவில்லை

படங்கள் ஓடவில்லை

கோலிவுட், டோலிவுட் என கலக்கி வந்த சமத்து நடிகைக்கு சமீப காலமாக எந்தவொரு படங்களும் சரியாக ஓடவில்லை. மேலும், முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் ஒரே அடியாக குறையத் தொடங்கின. ரீமேக் படத்தை நம்பியும் பலன் கொடுக்கவில்லை.

மார்க்கெட் சரிவு

மார்க்கெட் சரிவு

உச்சத்தில் இருந்து வந்த அவரின் மார்க்கெட் திடீரென சரியத் தொடங்கியது. வரிசையாக இளம் நடிகைகளும் களத்தில் இறங்க புதிய பட வாய்ப்புகளும் அதிகமாக வராத நிலையில், சினிமாவை தாண்டி வேற என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தார் அந்த பிரபல நடிகை.

புது தளம்

புது தளம்

சினிமாவை தாண்டி புது தளத்தில் காலடி பதிக்க நினைத்த அவருக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய வாய்ப்பு வர சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டார் அந்த சமத்து நடிகை. அதன் வெளியீட்டிற்காக காத்திருந்த நேரத்தில் மிகப்பெரிய சர்ச்சை கிளம்ப தற்போது நிலைமையே மாறிப்போய் விட்டது.

தப்பா எதுவும் பண்ணல

தப்பா எதுவும் பண்ணல

கண்டனங்கள், எதிர்ப்புகள் பெரிய இடங்களில் இருந்து கிளம்பிய நிலையில், என்ன செய்வது என்றே தெரியாத அந்த நடிகை, அமைதியுடனும் நம்பிக்கையுடன் காத்திருங்கள், தப்பா நாங்க எதுவுமே பண்ணல என கூறி வருகிறார். ஆனால், அவரது பேச்சை யாருமே பொருட்படுத்த வில்லை.

ஓரங்கட்டப்படுவார்

ஓரங்கட்டப்படுவார்

தடைகளை மீறி அந்த படைப்பு வெளியாகுமா? என்றும் வெளியான பின்னர் மேலும் சர்ச்சைகள் கிளம்புமா? என்றும் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்து வருகின்றன. மேலும், ஏற்கனவே சர்ச்சையை கிளப்பிய ஒல்லி நடிகையை கோலிவுட்டில் ஓரங்கட்டியதை போலவே இவரையும் ஓரங்கட்ட முடிவு செய்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் கசிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X