சரண்யா- பொன்வண்ணன் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம்.. வைரலாகும் போட்டோ.. வாழ்த்தும் ரசிகர்கள்!
சென்னை: சரண்யா- பொன்வண்ணன் மகள் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
முன்னாள் ஹீரோயினான சரண்யா பொன்வண்ணன், இப்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
அவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பெரும்பாலான படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

பொன்வண்ணன்
தமிழில் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் நடித்துவிட்ட சரண்யா, கமல்ஹாசனின் நாயகன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். 90- களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், பிறகு நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் 1995 ஆம் ஆண்டு நடந்தது.

மீண்டும் நடிப்பு
திருமணத்துக்குப் பிறகு சில காலம் நடிக்காமல் இருந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்தமகள் பிரியதர்ஷினி, இளைய மகள் சாந்தினி. பின்னர், கடந்த 2003 ஆம் ஆண்டு மீண்டும் நடிக்க வந்தார். ஹீரோயினாக நடித்து வந்த சரண்யா, பின்னர் அம்மா நடிகை ஆனார். சிறந்த நடிப்புக்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.

மூத்த மகள் பிரியதர்ஷினி
நடிகர் பொன்வண்ணனும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். சீரியலிலும் நடித்து வருகிறார். இவர்கள் மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு, சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமண தேதி
அந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. திருமண தேதி இன்னும் முடியவில்லை என்றும் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மணமகன் பற்றிய விவரங்களையும் அவர்கள் வெளியிடவில்லை. இதையடுத்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











