‘சொப்பன சுந்தரி’ புகழ் வைக்கம் விஜயலட்சுமிக்கு டும் டும் டும்!

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம் நடைபெற உள்ளது.

சென்னை: பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல பாடகியாக வலம் வருபவர் வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர் விக்ரம் பிரபு நடித்து திரைக்கு வந்த 'வீர சிவாஜி' படத்தில் பாடிய 'சொப்பன சுந்தரி நான்தானே' பாடல் மூலம் மிகவும் பிரபலமானார்.

Wedding bells for singer Vaikom Vijayalakshmi 08/09/2018

வித்தியாசமான குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்த வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை விஜயகுமார் டைரக்டு செய்கிறார். இதில் விஜயலட்சுமியாக கேரளாவில் மீன் விற்று படித்து பிரபலமான மாணவி ஹனன் ஹமீது நடிக்கிறார்.

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த இன்டீரியர் டெக்கரேஷன் கான்ட்ராக்டரும், மிமிக்ரி ஆர்ட்டிஸ்டுமான அனூப் என்பவருக்கும், வைக்கம் விஜயலட்சுமிக்கும் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 22-ஆம் தேதி வைக்கம் மகாதேவ் கோவிலில் இவர்களது திருமணம் நடக்கவுள்ளது.

இதுகுறித்து வைக்கம் விஜயலட்சுமி கூறுகையில், "2 வருடங்களுக்கு முன்பே அனூப்பை எனக்கு தெரியும். நண்பர்களாக பழகி வந்த எங்களுக்குள் காதல் ஏற்பட்டவுடன், இருவர் வீட்டிலும் சொன்னோம். அவங்களும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார்கள்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

முன்னதாக விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயமானது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அந்த திருமணம் நின்று போனது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X