வரும் 9 ஆம் தேதி பிரமாண்ட கல்யாணம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ்!

By

சென்னை: பிரபல நடிகையின் திருமண அழைப்பிதழ், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழில், 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படம் மூலம் அறிமுகமானவர், நடிகை நிஹரிகா.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர், பிரபல நடிகர் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாபுவின் மகள்.

பொறியாளர் சைதன்யா

பொறியாளர் சைதன்யா

இவரை மெகா குடும்பத்து நடிகை என்று கூறுகின்றனர். நிஹரிகாவுக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஆகஸ்ட் மாதம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

ஆடம்பர ஓட்டல்

ஆடம்பர ஓட்டல்

நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் உட்பட அவர்கள் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். திருமணம் வரும் 9 ஆம் தேதி நடக்கிறது. இப்போது உதய்பூரில் உள்ள ஆடம்பரமான ஓபராய் உடைவிலாஸ் அரண்மனை ஓட்டலில் திருமணம் நடக்கிறது.

ஸ்பெஷல் பார்ட்டி

ஸ்பெஷல் பார்ட்டி

திருமண ஏற்பாடுகளை நிஹரிகாவின் சகோதரர் வருண் தேஜ் கவனித்து வருகிறார். திருமணத்துக்கு இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில், சமீபத்தில் உதய்பூர் சென்ற அவர் அங்கிருந்து திரும்பினார். இந்நிலையில், திருமணத்துக்கு முன்பாக, தனது குடும்பத்தை சேர்ந்த தோழிகளுக்கு நடிகை நிஹரிகா, ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்திருந்தார்.

சிரஞ்சீவி மகள்கள்

சிரஞ்சீவி மகள்கள்

இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகள்கள் சுஷ்மிதா, ஶ்ரீஜா உள்பட அவர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். இந்த புகைப்படத்தை நிஹரிகா சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். திருமணத்துக்குப் பிறகு சினிமா துறையினருக்காக ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது.

திருமண அழைப்பிதழ்

திருமண அழைப்பிதழ்

இந்நிலையில், நிஹரிகா- சைதன்யா திருமண அழைப்பிதழ், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், டிசம்பர் 9 ஆம் தேதி மாலை 7.15 மணிக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்றும் 8.30 மணிக்கு டின்னர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது.

பிங்க் எலிபன்ட்

பிங்க் எலிபன்ட்

நடிகை நிஹரிகா, 2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான, ஒக்க மனசு மூலம் சினிமாவில் அறிமுகமானவர். ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் இருக்கிறார். 'பிங்க் எலிபன்ட் பிக்சர்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X