கல்யாணம் முடிஞ்சிடுச்சு.. இளம் நடிகையை மணந்தார் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர்!

சென்னை: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கும் அதே படத்தில் நடித்த நடிகைக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

துல்கர் சல்மான், ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன், ரக்‌ஷன் மற்றும் கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த ஆண்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றார் தேசிங் பெரியசாமி.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே போன் போட்டு தேசிங் பெரியசாமியை பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

வேற லெவல் ஹிட்

வேற லெவல் ஹிட்

துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் மற்றும் கெளதம் மேனன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம், கடந்த ஆண்டு தியேட்டரில் வெளியான படங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. பிளான் பண்ணி பக்காவாக திருடும் திருடர்கள் எப்படி எஸ்கேப் ஆகின்றனர் என்றும் அவர்களுக்குள் உருவாகும் காதல் என படம் பட்டையை கிளப்பியது.

நடிகையுடன் காதல்

நடிகையுடன் காதல்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங் பெரியசாமி அந்த படத்தில் நடித்த இளம் நடிகை நிரஞ்சனி அகத்தியனை காதலித்து வந்தார். சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர் என்ற தகவல் திருமண பத்திரிகையுடன் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

பெரிய வீட்டுப் பெண்

பெரிய வீட்டுப் பெண்

தல அஜித்தின் காதல் கோட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் அகத்தியனின் மூன்றாவது மகள் தான் நிரஞ்சனி என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் இயக்குநராக தேசிங் பெரியசாமி வெற்றிப் பெற்ற நிலையில், அடுத்த இயக்குநர் மாப்பிள்ளையாக அகத்தியன் வீட்டில் மணம் முடிக்கும் தகுதியை தேசிங் பெரியசாமி பெற்று விட்டார்.

இயக்குநர்களே மாப்பிள்ளைகள்

இயக்குநர்களே மாப்பிள்ளைகள்

இயக்குநர் அகத்தியனின் மூன்று மகள்களும் இயக்குநர்களையே திருமணம் செய்து கொள்ளும் ஆச்சர்யமான ஒற்றுமையும் இதில் அடங்கி உள்ளது. மூத்த மகளான கனியை சமர், தீராத விளையாட்டு பிள்ளை படங்களை இயக்கிய இயக்குநர் திரு திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மகளான நடிகை விஜயலக்‌ஷ்மியை பண்டிகை படத்தை இயக்கிய ஃபெரோஸ் திருமணம் செய்து கொண்டார். மூன்றாவது மகளான நிரஞ்சனியை தேசிங் பெரியசாமி திருமணம் செய்து கொண்டார்.

கல்யாணம் முடிஞ்சிடுச்சு

கல்யாணம் முடிஞ்சிடுச்சு

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கும் நடிகை நிரஞ்சனி அகத்தியனுக்கும் இன்று குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் சூழ கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. மணக் கோலத்தில் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பாபா முத்திரை

பாபா முத்திரை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான தேசிங் பெரியசாமி மாப்பிள்ளை கோலத்திலேயே பாபா முத்திரையை காட்டும் புகைப்படமும் வைரலாகி வருகிறது. அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் அடுத்த படத்தை தேசிங் பெரியசாமி இயக்கப் போவதை தான் இப்படி அறிவித்துள்ளாரா? என்றும் ரசிகர்கள் கெஸ் பண்ணி வருகின்றனர்.

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

நட்சத்திர தம்பதியினருக்கு திரை உலகை சார்ந்த பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் ரசிகர்களும் நடிகர் துல்கர் சல்மான் ரசிகர்களும் இயக்குநர் தேசிங் பெரியசாமியை வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X