இரண்டாவது திருமணம் செய்கிறாரா? பிரபல பாடகி பற்றி மீண்டும் வதந்தி.. தொடரும் செய்தியால் அப்செட்!

By

ஐதராபாத்: பிரபல பாடகி இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக மீண்டும் வதந்தி பரவியுள்ளது.

பிரபல தெலுங்கு பின்னணி பாடகி, சுனிதா. ஏராளமான பாடல்களை பாடியுள்ள இவர், டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார்.

சில படங்களில் நடித்துள்ள இவர், பல நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசி வருகிறார்

காதல் சொல்வது

காதல் சொல்வது

இவர் தமிழிலும் பல பாடல்களை பாடியுள்ளார். இளையாராஜா இசையில் சில பாடல்களை பாடியுள்ள அனிதா, விஜய்யின் பத்ரி படத்தில் இடம்பெறும் காதல் சொல்வது உட்பட பல படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார். சிறுவயதிலேயே திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவானார்.

அடிக்கடி வதந்தி

அடிக்கடி வதந்தி

பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டார். இவர் மகள் ஷ்ரேயாவும் பாடகியாக இருக்கிறார். பாடகி சுனிதா பற்றி அடிக்கடி வதந்தி வருவது டோலிவுட்டில் வழக்கம். அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்றும் அவரை காதலிக்கிறார், இவரைக் காதலிக்கிறார் என்று செய்திகள் வந்துபோகும்.

வதந்தி பரப்ப குரூப்

வதந்தி பரப்ப குரூப்

இந்நிலையில் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வரும் பதிவுகளை அவர் கண்டு கொள்வதில்லை. இந்த கொரோனா காலகட்டத்தில் இதுபோன்று வந்த வதந்திக்கு உருக்கமான பதிவு ஒன்றை அவர் போஸ்ட் செய்திருந்தார். அதில், எந்த காரணமும் இல்லாமல் என்னை குறிவைத்து வதந்தி பரப்புவதற்காக, வாட்ஸ் அப் குரூப் தொடங்கப்பட்டு இருப்பதை பார்த்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இந்நிலையில் இப்போதும் அவர் பற்றி வதந்தி பரவி இருக்கிறது. அவர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சோசியல் மீடியாவில் இந்த செய்தி மீண்டும் வைரலானதை அடுத்து பலர் அவருக்கு போன் செய்து கேட்டுள்ளனர். அவர் அதை மறுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X