அமலா பால் ஒரு உண்மையான பொக்கிஷம்.. கண்ணுக்குள் வைத்து காப்பேன்! - இயக்குநர் விஜய்
சென்னை: அமலா பால் என் வாழ்வில் கிடைத்த அரிய பொக்கிஷம். அவரை கடைசி வரை கண்ணுக்குள் வைத்துக் காப்பேன், என்று இயக்குநர் விஜய் தெரிவித்துள்ளார்.
நடிகை அமலா பாலுக்கும் இயக்குநர் விஜய்க்கும் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த காதல், இப்போது திருமணத்தில் வந்து நிற்கிறது.
இதனை முறைப்படி அறிவிக்க செய்தியாளர் சந்திப்பு நடத்தத் திட்டமிட்டு, பின்னர் ரத்து செய்துவிட்டனர் இருவரும்.
இப்போது இயக்குநர் விஜய், தங்கள் காதல், திருமணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருமணம்
அதில், "என்னுடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டு உதவிய எல்லோருக்கும் நன்றி. நான் இதுவரை தனியாக இருந்தேன். இப்போது திருமணம் செய்து கொள்ளும் நிலையை எட்டி உள்ளேன் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அமலா பால்
ஆமாம் என் வாழ்க்கை துணையை தேடிய நிலை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. என் வாழ்க்கை துணையாக நடிகை அமலாபாலை கண்டறிந்து விட்டேன்.

பொக்கிஷம்
அமலாபால் மிகவும் அழகான இதயம் கொண்டவர். அவரை மிகவும் காதலிக்கிறேன். அவர் என் வாழ்வில் வந்த உண்மையான பொக்கிஷம். கண்ணில் வைத்து அவரைக் காப்பேன்.

செய்தி
எங்கள் திருமணம் பற்றி பத்திரிகைகளுக்கும், நண்பர்களுக்கும் முறைப்படி அறிவிக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதற்குள் எங்களுக்கு தெரியாமலேயே திருமணம் பற்றிய செய்தி வெளிவந்து விட்டது.

மறைக்கவில்லை
திருமணத்தை நண்பர்களிடமோ, ரசிகர்களிடமோ மறைக்க வேண்டிய எண்ணம் எங்களுக்கு இல்லை. தனிப்பட்ட முறையில் திருமண அழைப்பிதழோடு சந்திப்போம்.

விரைவில்...
அமலாபாலுக்கு படங்கள் கைவசம் உள்ளன. எனக்கும் எனது மனம் கவர்ந்த ‘சைவம்' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டியுள்ளது. இதெல்லாம் முடிந்த பிறகு திருமணம் நடக்கும்," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











