என் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா?: அனுஷ்கா அம்மா விளக்கம்

By Siva

Recommended Video

என் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா?: அனுஷ்கா அம்மா- வீடியோ

ஹைதராபாத்: பிரபாஸுடன் திருமணம் என்று பேசப்படுவது குறித்து அனுஷ்காவின் அம்மா விளக்கம் அளித்துள்ளார்.

பாகுபலி படத்தில் நடித்ததில் இருந்து பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாக தொடர்ந்து பேசப்படுகிறது. ரீல் ஜோடியான அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

பிரபாஸ், அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப் போவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றது.

அனுஷ்கா

அனுஷ்கா

எனக்கு பிரபாஸை மிகவும் பிடிக்கும். அவரும், அனுஷ்காவும் ஸ்டார்கள், ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். என் மகள் அனுஷ்காவுக்கு பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. அவர்களுக்கு இடையே காதல் இல்லை. அதனால் அவர்களின் திருமணம் பற்றி வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள் என்று அனுஷ்காவின் அம்மா தெரிவித்துள்ளார்.

காதல்

காதல்

நானும் அனுஷ்காவும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று பிரபாஸ் பல முறை கூறியும் அவர் பேச்சை யாரும் நம்பவில்லை. பிரபாஸ் வீட்டில் காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் அவர் அனுஷ்காவை திருமணம் செய்ய மாட்டார் என்றும் கூறப்படுகிறது. பிரபாஸுக்கு அவர் வீட்டில் பெண் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். அதே போன்று அனுஷ்காவுக்கு அவர் வீட்டில் நல்ல மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம். இந்த ஆண்டே அவர்களின் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

ஜோடி

ஜோடி

தயவு செய்து பிரபாஸை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அனுஷ்காவிடம் அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். நிஜத்தில் சேராவிட்டாலும் படத்திலாவது மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள் ரசிகர்கள். பாகுபலி படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் அனுஷ்கா தான் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவரின் உடல் எடை பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது என்று செய்திகள் வெளியாகின.

சினிமா

யோகா ஆசிரியையாக இருந்த அனுஷ்கா நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதையொட்டி #13MassYearsofAnushkaShetty என்ற ஹேஷ்டேக்குடன் அவரை பற்றி ரசிகர்கள் ட்வீட்டி வருகிறார். வலுவான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருபவர் அனுஷ்கா. எத்தனையோ படங்களில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியபோதிலும் பாகுபலி மூலம் தான் உலகம் முழுவதும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X