»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

திரைப்படத் தயாரிப்பாளரும், மதிமுக பிரமுகருமான கலைப்புலி தாணுவின் மகன் பரந்தாமன் மற்றும் கனகலட்சுமி திருமணம்கோயம்பேடு ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில் (நடிகர் விஜயகாந்த்தின் திருமண மண்டபம்) நடந்தது.

திருமண விழாவில் ஆளுநர் ராம் மோகன் ராவ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு வாழ்த்தினர்.

மற்றும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, நடிகைராதிகா, இயக்குநர்கள் பாரதி ராஜா, செல்வமணி, சேகர், இசையமைப்பாளர் தேவா மற்றும் பல்வேறு திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மத்திய அமைச்சர் அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் வாழ்த்துச் செய்திஅனுப்பியிருந்தனர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil