பிரபல தயாரிப்பாளர் என்னிடம் எல்லை தாண்டினார், அத்துமீறினார்: பாடகி மடோனா புகார்

By Siva

நியூயார்க்: பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தன்னிடம் எல்லை தாண்டியதாக பிரபல அமெரிக்க பாடகி மடோனா தெரிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பட வாய்ப்பு அளிப்பதாகக் கூறி தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சில நடிகைகளும், தங்களை பலாத்காரம் செய்ததாக சில நடிகைகளும் தெரிவித்தனர்.

Weinstein crossed lines and boundaries: Madonna

மேலும் சிலரோ, வெயின்ஸ்டீன் தங்களை கட்டாயப்படுத்தி ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டினார்கள். இந்நிலையில் பிரபல அமெரிக்க பாடகி மடோனாவும் வெயின்ஸ்டீன் மீது புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மடோனா தி நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

1991ம் ஆண்டு ட்ரூத் ஆர் டேர் ஆவணப் படத்தை எடுத்தபோது வெயின்ஸ்டீன் என்னிடம் எல்லை தாண்டினார், அத்துமீறி நடந்தார். மேலும் நாங்கள் சேர்ந்து பணியாற்றியபோது பாலியல் ரீதியாக பேசி கடலை போட்டார். அப்பொழுது அவர் திருமணமானவர். எனக்கு அவர் மீது விருப்பமே இல்லை. அவர் என்னை போன்று பிற பெண்களிடமும் இப்படி நடந்து கொண்டுள்ளார் என்பது எனக்கு தெரியும்.

வெயின்ஸ்டீன் அதிகாரம் படைத்தவர். அவரின் படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன. அனைவரும் அவருடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறார்கள். அதனால் இதை எல்லாம் பொறுத்துக் கொண்டு தான் போக வேண்டும் என்று நினைத்தோம் என்றார்.

மடோனாவின் குற்றச்சாட்டை ஹார்வி வெயின்ஸ்டீன் மறுத்துள்ளார். தங்களுக்கு இடையேயான உறவை மடோனா வேறு மாதிரியாக புரிந்து கொண்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

மடோனாவின் ட்ரூத் ஆர் டேர் ஆவணப் படத்தை வெயின்ஸ்டீனின் நிறுவனம் தான் விநியோகம் செய்தது. அடுத்தடுத்து பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்ததால் தயாரிப்பு நிறுவன சேர்மன் பதவியில் இருந்து வெயின்ஸ்டீன் கடந்த 2017ம் ஆண்டு நீக்கப்பட்டார்.

பெரும்பாலான நடிகைகள் தெரிவித்த புகார் என்னவென்றால் பட வாய்ப்பு தருவதாக ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி வெயின்ஸ்டீன் ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்டார் என்பது தான். பல நடிகைகளின் புகார் பொய்யானது என்று தெரிவித்துள்ளார் வெயின்ஸ்டீன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X