பிரபல தயாரிப்பாளர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார்: நடிகை பரபரப்பு புகார்
Recommended Video

கேன்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்த தன்னை தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ஏசியா அர்ஜென்டோ தெரிவித்துள்ளார்.
இத்தாலியை சேர்ந்த நடிகை ஏசியா அர்ஜென்டோ பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் நடந்த திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது,

கேன்ஸ்
இதே கேன்ஸ் நகரில் 1997ம் ஆண்டு தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது எனக்கு 21 வயது. இந்த திரைப்பட விழாவில் தான் அவர் நடிகைகளை தேடிப் பிடித்து கை வைப்பார்.

மிரட்டல்
ஹோட்டல் அறையில் வைத்து என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். என்னால் அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. இனி அவரால் இந்த திரைப்பட விழாவுக்கு வர முடியாது. யாரும் அவரை வரவேற்க மாட்டார்கள்.

சினிமா
இனி வெயின்ஸ்டீன் அவமானத்தில் வாழ வேண்டியது தான். எந்த சினிமா உலகம் அவரை கொண்டாடி, அவரின் குற்றங்களை மறைத்ததோ அதே உலகம் தற்போது அவரை தவிர்த்து வருகிறது என்றார் ஏசியா.

துவக்கம்
அடுத்த 5 ஆண்டுகளில் வெயின்ஸ்டீன் கூறியபடி எல்லாம் நடக்க வேண்டியதாகிவிட்டது. இல்லை என்றால் அவர் என் சினிமா கெரியரை நாசமாக்கிவிடுவார் என்று பயந்தேன். பலாத்காரம் செய்த அன்றே அவர் ஜெயித்துவிட்டார் என்று ஏசியா அர்ஜென்டோ முன்னதாக செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

விளக்கம்
வெயின்ஸ்டீனின் இத்தாலி வழக்கறிஞர் பிலோமினா குசானோ கூறும்போது, ஏசியா அர்ஜென்டோ கூறிய புகாரில் உண்மை இல்லை. அவர் விருப்பப்பட்டு தான் வெயின்ஸ்டீனுடன் உறவு கொண்டார். அதன் பிறகு அவர் வெயின்ஸ்டீனின் பி. மங்கீ படத்தில் நடித்தார் என்றார்.


Click it and Unblock the Notifications











