பாஜகவோட பிரச்சார படம் தான் துரந்தர் 2.. ஆதித்யா தர் முகத்திரை கிழிந்து தொங்குது என துருவ் ரதி விளாசல்!
மும்பை: துரந்தர் திரைப்படம் வந்தபோதே அது முழுக்க முழுக்க பாஜகவின் பிரச்சார படம் என பிரபல யூடியூபர் துருவ் ரதி விளாசிய நிலையில், துரந்தர் 2 திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில், தற்போது மக்களே கண்கூடாக ஆதித்ய தர் பாஜகவுக்கு ஆதரவாக எப்படி ஒரு பிரச்சார விஷத்தை விதைத்துள்ளார் என்பதை புரிந்துக் கொண்டனர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மற்ற மொழி படங்களில் வரும் சண்டைக் காட்சிகளுக்கும் சாதாரண காட்சிகளுக்கும் மத்திய தணிக்கை குழு அதிக கட்டுப்பாடுகளையும் ஆட்சேபனைகளையும் விதித்து வரும் நிலையில், அதிகப்படியான வயலென்ஸ் காட்சிகள் கொண்ட துரந்தர் 2 படத்தை எப்படி எந்தவொரு கட்களும் கொடுக்காமல் வெளியிட்டனர் என்கிற கேள்விகளை பலரும் எழுப்பி உள்ளனர்.

பராசக்தி படத்தை கூட ரிவைசிங் கமிட்டி பார்த்து பல கட்களும், மியூட்களும், இதெல்லாம் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என போட அறிவுறுத்தியது. ஆனால், துரந்தர் 2 படத்தில் தலையை வெட்டி பந்தாடும் காட்சியிலோ, மோடியை டிவியில் காட்டும் காட்சிகளிலோ எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி தாராளம் காட்டியுள்ளதே என பலரும் விளாசி வருகின்றனர்.
பக்கா பாஜக பிரச்சார படம்: தேர்தல் நேரத்தில் சரியாக பக்காவான பிரச்சார படத்தை பாஜக இறக்கியுள்ளதாகவும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒரே நாளில் மோடி தடை செய்தது கறுப்பு பணத்தை ஒழிக்க அல்ல கள்ள நோட்டுக்களை ஒழிக்கத்தான் என கற்பனை புனைவு படம் என ஆரம்பத்திலேயே கார்டு போட்டு எடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்து விட்டு மக்கள் க்யூவில் நின்று கஷ்டப்பட்டு பல பேர் உயிரிழந்ததை எல்லாம் மறந்துவிட்டு கொண்டாடுகின்றனர் என பாலிவுட்டிலேயே துரந்தர் 2 படத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. தென்னிந்திய மொழிகளில் வேண்டுமென்றே படத்தை தாமதப்படுத்தி இந்தி திணிப்பையும் ஆதித்யா தர் முன்னெடுத்துள்ளார் போன்ற குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகின்றனர்.
துருவ் ரதி குற்றச்சாட்டு: துரந்தர் படத்தை பார்த்துவிட்டே இந்த படத்தில் ஏகப்பட்ட உண்மைச் சம்பவங்களை கற்பனை கலந்து பாஜகவுக்கு சாதகமான பிரச்சார படமாக ஆதித்யா தர் உருவாக்கியுள்ளார் என துருவ் ரதி குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். ஆனால், படமாக துரந்தர் படம் சிறப்பாக இருந்த நிலையில், அவரை யாருமே மதிக்கவில்லை. இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பதிவில், 3 மாதங்களுக்கு முன்பே ஆதித்யா தர் பாஜக பிரச்சாரம் படமெடுத்துள்ளார் என்று சொல்லும் போது யாருமே நம்பவில்லை. முதல் பாகத்தில் பிரச்சார நெடியை குறைத்து வைத்திருந்த நிலையில், இந்த முறை துணிச்சலுடன் முழு பிரச்சாரத்தையும் இறக்கி தனது முகத்திரையை கிழித்துக் கொண்டார் ஆதித்யா தர் என மீண்டும் அட்டாக் செய்துள்ளார்.
பாக்ஸ் ஆபீஸ் பாதிக்குமா?: அக்ஷய் கன்னாவின் நடிப்பு மற்றும் பாடல்கள் முதல் பாகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. இந்நிலையில், 2வது பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிளம்பி வரும் நிலையில், வசூலில் பாதிப்பு ஏற்படுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ரம்ஜான் விடுமுறைக்கும் மக்கள் இந்த படத்தைத் தான் தியேட்டர்களில் சென்று பார்க்கப் போகின்றனர் என்றும் தொடர்ந்து 5 நாட்கள் பாக்ஸ் ஆபீஸ் நிரம்பி வழிந்தாலே படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிடும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











