ஜோசப் விஜய்யோ, முகமது விஜய்யோ அவர் எங்க 'தமிழன்' விஜய் #WeLoveJosephVijay
சென்னை: ஜோசப் விஜய்யோ, முகமது விஜய்யோ அவர் எங்க விஜய் அண்ணா என்று தளபதி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மெர்சல் படத்திற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் கடந்த 4 நாட்களாக நாடே மெர்சல் படம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. யாருப்பா எதிர்ப்பு தெரிவித்தது அவரை எனக்கே பார்க்கணும் போல இருக்கு என்று ஆளாளுக்கு மீம்ஸ் போடுகிறார்கள்.
பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா விஜய்யை ஜோசப் விஜய் என்று கூற ரசிகர்களோ #WeLoveJosephVijay என்று ஹேஷ்டேக் போட்டு ட்வீட்டுகிறார்கள்.
விஜய்
#WeLoveJosephVijay என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. தளபதி மட்டும் அல்ல தல ரசிகர்களும் 'ஜோசப் விஜய்யை' ஆதரித்து ட்வீட்டுகிறார்கள்.
ஜோசப் விஜய்
எவன் என்ன சொன்னாலும் சரி. இந்த உலகில் அனைத்துமே எனக்கு ஜோசப் தான் #WeLoveJosephVijay 💙மெர்சல் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும்.
முகமது விஜய்
விஜய், ஜோசப் விஜய் அல்லது முகமது விஜய் எதுவாக இருந்தாலும் மதங்களை தாண்டி அவரை ஒரு சகோதரராக எங்களுக்கு பிடிக்கும். ❤️ ...#WeLoveJosephVijay
தமிழன்
நாங்க ஒரு மதத்தை சேர்ந்தவரோட ஃபேன் இல்ல நாங்க ஒரு தமினோட ஃபேன்... #WeLoveJosephVijay
சாதி
"சாதிகள் இல்லையடி பாப்பா"
என்று கூறிய மாக கவி பாரதியார் பிறந்த இந்தியவில் சாதியைப் பற்றி பேசுவது
சரியா?????
#WeLoveJosephVijay


Click it and Unblock the Notifications











