படப்பிடிப்பு தளத்துக்கே சென்று ரஜினியை சந்தித்த அமைச்சர்... ஏன் தெரியுமா?
மேற்கு வங்க அமைச்சர் டார்ஜிலிங்கில் நடிகர் ரஜினியை சந்தித்தார்.
Recommended Video

சென்னை: மேற்கு வங்க சுற்றுலாத்துறை அமைச்சர் கவுதம் தெப், நடிகர் ரஜினிகாந்த்தை படப்பிடிப்பு தளத்துக்கு சென்று சந்தித்துள்ளார்.
காலாவைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். கலாநிதிமாறனின் சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், டெக்ராடூன் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சில நாட்கள் நடைபெறுகிறது.
காலா படம் ரிலீசாவதற்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுவிட்டார். தற்போது டார்ஜிலிங் அருகே உள்ள குர்சங் பகுதியில் படக்குழு முகாமிட்டுள்ளது.
அங்கு சில காட்சிகளை படம் பிடித்த பின்னர், டெக்ராடூனுக்கு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது. ரஜினி நடிக்கும் முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட உள்ளன.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் கவுதம் தெப், டார்ஜிலிங்கில் ரஜினியை சந்தித்தார். முதல்வர் மம்தா பானர்ஜி சார்பில் ரஜினி சந்தித்து வாழ்த்து கூறியதாக அவர் தெரிவித்தார். படப்பிடிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார்.


Click it and Unblock the Notifications











