twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பத்மாவதிக்கு ஆதரவாக மேற்கு வங்க அரசின் முதல் குரல் : முதல்வர் மம்தா அதிரடி!

    By Vignesh Selvaraj
    |

    கொல்கத்தா : பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பத்மாவதி' திரைப்படம் சர்ச்சைக்குரிய கதையால் பல தரப்பிலும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.

    சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'பத்மாவதி' படத்தை எடுத்திருக்கிறார் பன்சாலி. இந்தப் படம் வரலாற்றைத் திரித்து எடுக்கப்பட்டிருப்பதாக எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.

    பல மாநிலங்கள் இந்தப் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் நிலையில், மேற்கு வங்காளத்தில் படத்தை வெளியிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என அம்மாநில முதவர் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

    தலையை வெட்டுவோம்

    தலையை வெட்டுவோம்

    'பத்மாவதி' படத்தில் ராணியாக நடித்திருக்கும் தீபிகாவின் தலையை வெட்டிக் கொண்டுவந்தால் ரூ.5 கோடி பரிசு தரப்படும் என அறிவித்தது ஒரு அமைப்பு. இன்னொரு அமைப்பு பத்மாவதியின் மூக்கை அறுப்போம் எனச் சூளுரைத்தது.

    கடுமையான எதிர்ப்பு

    கடுமையான எதிர்ப்பு

    'பத்மாவதி' படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் படத்தை வெளியிட மாட்டோம் என்று அந்தந்த மாநில முதல்வர்களே அறிவித்துள்ளனர்.

    இயக்குநர், நடிகை மீது நடவடிக்கை

    இயக்குநர், நடிகை மீது நடவடிக்கை

    இந்த நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்கும் படத்தை திரையிட மாட்டோம் என்று அறிவித்துள்ளார். இதன் அடுத்த கட்டமாக படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி மீதும், நடித்த தீபிகா படுகோனே மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி உள்ளார்.

    பன்சாலியே காரணம்

    பன்சாலியே காரணம்

    'பத்மாவதி பட பிரச்னைக்கு இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகியோரே முக்கியக் காரணம். மக்களின் உணர்வுகளோடு யாரும் விளையாடக்கூடாது. சிலர் இதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.' எனக் கூறியுள்ளார்.

    தீபிகா மீது நடவடிக்கை

    தீபிகா மீது நடவடிக்கை

    மேலும், 'படத்துக்கு எதிராக மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். அவர்களுடன் மக்களின் உணர்வுகளை புண்படுத்திய சஞ்சய் லீலா பன்சாலி மீதும், தீபிகா படுகோனே மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    மம்தா பானர்ஜி ஆதரவு

    மம்தா பானர்ஜி ஆதரவு

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் 'பத்மாவதி' படத்தைத் திரையிட தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 'பத்மாவதி' படத்திற்கு முதல் ஆதரவுக் குரல் மேற்கு வங்க அரசிடமிருந்து ஒலித்திருக்கிறது.

    English summary
    The film 'Padmavati' has been facing protests by controversial story. Uttar Pradesh, Rajasthan and Madhya Pradesh, punjab, Gujarat chief ministers have announced the film does not release in those states. In this case, West bengal CM Mamta banerjee welcomes padmavati to bengal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X