2 பேருக்கு நடுவுலதான் போட்டியே.. டிரெண்டாகும் #WeTrustVIJAY vs #DMKWinningBig.. ஹாஷ்டேக்குகள்!
சென்னை: ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைய உள்ளன. நடிகர் விஜய் தவெக தலைவராக சொன்ன சொல் மாறாமல் கட்சியை தொடங்கி 233 தொகுதிகளில் வேட்பாளர்களை இறக்கி போட்டியிடுகிறார்.
சென்னையின் ஈசிஆர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று விஜய் தனது பிரச்சாரத்தை தனது வீட்டில் இருந்தே தொடங்கிவிட்டார். இந்நிலையில், #WeTrustVIJAY ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

விஜய்க்குப் போட்டியாக #DMKWinningBig ஹாஷ்டேக்கை திமுக ஐடி விங்கும் ஜோராக ஆரம்பித்து ரெண்டே கட்சிக்கு இடையே தான் போட்டி என்பதை சமூக வலைதளங்களிலும் வைரலாக்கி வருகின்றன.
விஜய்யை நம்பும் மக்கள்: #WeTrustVIJAY ஹாஷ்டேக்கை போட்டு தமிழ்நாட்டு மக்களின் கடைசி நம்பிக்கை விஜய் தான் அவரது தொண்டர்கள் மற்றும் தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் ஏகப்பட்ட வீடியோ எடிட்களை வெளியிட்டும், விஜய்யின் சென்னை பிரச்சார வீடியோக்களைய் வெளியிட்டும் ஹாஷ்டேக்கை டாப் டிரெண்டிங்கில் கொண்டு வந்துள்ளனர்.
கேம் சேஞ்சர் விஜய்: தமிழ்நாட்டு அரசியலில் விஜய் ஒரு கேம் சேஞ்சராக மாறப்போகிறார் என்றும் திமுக அரசை வீழ்த்தி விஜய் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டே வெற்றி வாகை சூடுவார் என அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். விஜய் சில மாவட்டங்களை மட்டுமே கவர் செய்துள்ளார். மற்ற இடங்களுக்கு அவர் செல்லவே இல்லை. அங்கே உள்ள மக்கள் அவருக்கு எப்படி ஓட்டுப் போடுவார்கள் என திமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. உங்கள் கட்சி தலைவர்கள் மட்டும் 234 தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தார்களா? என பதிலுக்கு சண்டையும் சோஷியல் மீடியாவில் அரங்கேறி வருகின்றன.
திமுக தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: இதுவரை தொடர்ந்து திமுக தேர்தலில் 2 முறை தொடர்ச்சியாக வெற்றிப் பெற்று ஆட்சியை பிடிக்கவில்லை என ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், அதையெல்லாம் தவிடு பொடியாக்கி மீண்டும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியை பிடிக்கும் என திமுகவினர் அதிரடியாக தங்கள் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். அதிமுக டிரெண்டுக்கு பதிலாக NDA ஹாஷ்டேக் இப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கூடிய சீக்கிரத்தில் அவர்களும் சோஷியல் மீடியா பிரச்சாரத்தை தொடங்கவுள்ளனர்.


Click it and Unblock the Notifications