எச்சூச்மீ ஷங்கர் சார், 2.0 டீஸர் எப்பனு சொன்னீங்கனா..: ட்விட்டரை தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள்
சென்னை: ரஜினி ரசிகர்கள் 2.0 டீஸரை வெளியிடுமாறு இயக்குனர் ஷங்கருக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஷங்கர் ரஜினியை வைத்து எடுத்துள்ள படம் 2.0. வி.எப்.எக்ஸ் வேலைகள் என்று கூறி பட ரிலீஸ் ஆண்டுக் கணக்கில் தள்ளிப் போனது. 2.0 படம் எப்படா வரும் என்ற நிலைமைக்கு ரஜினி ரசிகர்கள் வந்துவிட்டனர். இந்நிலையில் தான் படம் நவம்பர் மாதம் 29ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்நிலையில் டீஸரை வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து ட்வீட்டி வருகிறார்கள். #WeWant2Point0Teaser என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட்டுகிறார்கள்.
டீஸர்
எச்சூச்மீ @shankarshanmugh சார் @LycaProductions டீசர் எப்பனு சொன்னீங்கனா கொஞ்சம் நல்லா இருக்கும்.. #WeWant2Point0Teaser
பொறுமை
ரஜினி ரசிகர்கள் பொறுமையை இழந்துவிட்டனர்
லைக்ஸ்
ரஜினி ரசிகர்கள் டீஸர் கேட்டு போடும் ட்வீட்டுகள் சிலவற்றை இயக்குனர் ஷங்கர் லைக் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்களோ இப்ப என்ன சொல்ல வருகிறார் என்று குழம்பியுள்ளனர்.
டீஸர்
தயவு செய்து டீஸரை விடுங்கய்யா ஷங்கர் சார் என்று கெஞ்சுகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
டிரெண்ட்
இப்படி ட்விட்டரில் டிரெண்டாகவிட்டாலாவது ஷங்கர் 2.0 பட டீஸரை வெளியிடுவார் என்று நினைக்கிறார்கள் தலைவர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











