ரஜினியின் ஆன்மீக அரசியல்: காலா இயக்குனர் என்ன சொல்கிறார்?
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி இயக்குனர் பா. ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.
காஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்ற இசைக்குழுவை உருவாக்கியுள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித். கானா, ராக், ராப் ஆகிய மூன்றையும் சேர்த்து கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது காஸ்ட்லெஸ் கலெக்டிவ்.
இது குறித்த நிகழ்ச்சியில் ரஞ்சித்திடம் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கேட்கப்பட்டது.

அரசியல்
ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி கேட்டதற்கு ரஞ்சித் கூறியதாவது, ரஜினி சார் அரசியலுக்கு வருவது பற்றி முன்னாடியே என்னிடம் பேசுவாங்க. பேசும் அளவுக்கு தான் நமக்கும், அவருக்குமான உறவு என்றார்.

சாதி மதம்
சாதியை ஒழிக்க பாடுபடுகிறீர்கள். ரஜினியின் ஆன்மீக அரசியல் மூலம் சாதி, சமய சார்பற்ற சூழலை தமிழகத்தில் உருவாக்கப்படுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, வேலைப்பாடுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கொள்கை பற்றி இன்னும் தெரியவில்லை. கட்சி ஆரம்பிக்கிறேன் என்று மட்டும் தான் கூறியிருக்கிறார். கொள்கையை அறிவித்த பிறகு நாம் அது பற்றி பேசலாம் என்றார்.

வசனங்கள்
கபாலி படத்தில் உங்களுடைய வலிகளை தான் ரஜினிகாந்த் வசனமாக பேசியுள்ளார். அவர் அரசியலுக்கு வரும்போது, நீங்கள் சாதி ஒழிப்புக்காக கூட அப்படி செயல்படலாமே என்று ரஞ்சித்திடம் கேட்கப்பட்டது. இதுவரைக்கும் இல்லை. இது பெரிய டாபிக். பின்னால் பேசுவோம் என்றார்.

காலா
ரஜினிகாந்தை வைத்து கபாலி படத்தை எடுத்த பா. ரஞ்சித் அடுத்ததாக காலா படத்தையும் அவரை வைத்தே இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











