வாவ், வவ்வாவ், தல போல வருமா?: தோனியை கொண்டாடும் பிரபலங்கள்
Recommended Video
சென்னை: நேற்றைய ஐ.பி.எல். போட்டியை பார்த்த திரையுலக பிரபலங்களால் கூல் கேப்டன் தோனியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் பெங்களூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இருப்பினும் 48 பந்துகளில் 84 ரன்கள் அடித்த தோனியை பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வெங்கட் பிரபு
நேற்றைய போட்டியை பார்த்த இயக்குநர் வெங்கட் பிரபு தோனியை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.
கபிர் துஹன் சிங்
வாவ், வாவ், என்ன ஒரு அருமையான போட்டி, தோனி நீங்க பியூட்டி என்று தல பட வில்லன் கபிர் துஹன் சிங் ட்வீட் செய்துள்ளார்.
சித்தார்த்
தோனி மாதிரி யாரும் இருந்ததும் இல்லை, இனி இருக்கப் போவதும் இல்லை. முடிவு முக்கியம் இல்லை, பாயிண்ட் முக்கியம் இல்லை, இது தோனிக்கு மிகப் பெரிய வெற்றி. அவரின் அமைதி சூப்பர் பவர். உங்களுக்கு சல்யூட். நீங்கள் கிரிக்கெட்டை மாற்றிவிட்டீர்கள் என்கிறார் சித்தார்த்.
சுசீந்திரன்
பெங்களூர் அணி வெற்றி பெற்றிருந்தாலும் அனைவரும் தோனியின் ஆட்டத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பிரேம்ஜி
தோனியால் பழையபடி சிக்ஸ் அடிக்க முடியாது என்று விமர்சித்தவர்கள் எல்லாம் நேற்று வாயடைத்து போய்விட்டனர்.


Click it and Unblock the Notifications











