Don't Miss!
- Finance
பாகிஸ்தான் ரூபாய் நிலைமை ரொம்ப மோசம்.. இப்படியே போச்சுன்னா..!!
- News
இனிமே குடியரசு தலைவர் மாளிகையிலிருப்பது "முஹல்" தோட்டமில்லை.. "அம்ரித் உத்யான்" அதிரடி மாற்றம்
- Sports
"ஹர்திக் பாண்ட்யா புத்திசாலி இல்லை".. 2வது டி20ல் பெற்ற தோல்வி.. பாக். முன்னாள் வீரர் கடும் விளாசல்!
- Technology
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க சுயநலமே இல்லாமல் எப்போதும் மற்றவர்களை ஊக்குவிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஏய் எப்புர்ரா.. வெயிட்டை குறைத்து ஸ்மார்ட்டான விஜய்சேதுபதி.. இனிமே ஒன்லி ஹீரோ தான்!
சென்னை: உடல் எடையை குறைத்து செம அழகாக மாறி உள்ள புதிய செல்ஃபி புகைப்படத்தை ஷேர் செய்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.
டிஎஸ்பி படத்தில் பார்த்த உருவமா இது? என ரசிகர்கள் கொஞ்சம் கூட நம்ப முடியாமல் பித்துப் பிடித்துப் போயுள்ளனர்.
சிம்பு, குஷ்பு எல்லாம் டிரான்ஸ்ஃபர்மேஷன் பண்ணும் போது நான் பண்ண மாட்டேனா என ஆணழகனாகவே மாறி உள்ளார் விஜய்சேதுபதி.
தலைவா
பல்லாண்டு
பல்லாண்டு
வாழ்க..
ரஜினியை
வாழ்த்திய
சிவகார்த்திகேயன்..
ரீசன்ட்
க்ளிக்ஸ்!

ஏகப்பட்ட முயற்சி
சினிமாவில்
சாதிக்க
ஏகப்பட்ட
முயற்சிகளை
செய்து
இந்த
இடத்துக்கு
வந்திருக்கிறார்
நடிகர்
விஜய்சேதுபதி.
அட்மாஸ்பியர்
ஆர்ட்டிஸ்ட்,
துணை
நடிகர்,
வில்லன்,
ஹீரோ,
மாஸ்
வில்லன்
என
வெரைட்டி
காட்டி
நடித்து
வரும்
விஜய்சேதுபதியின்
லேட்டஸ்ட்
புகைப்படம்
ரசிகர்களை
ஆச்சர்யத்தில்
ஆழ்த்தி
உள்ளது.

முரட்டு பாடி
நானும் ரவுடிதான் படத்தில் இருந்தது போல காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு கூட மாற முடியாமல் ரொம்பவே உடல் எடை அதிகரித்த தோற்றத்தில் இருந்தார் விஜய்சேதுபதி. இந்நிலையில், இப்படியொரு லுக் எந்த படத்திற்காக இந்த அதிரடி மாற்றம் என ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

சுமார் மூஞ்சி குமாரு
இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பால குமாரா படத்தில் சுமார் மூஞ்சி குமார் எனும் கேரக்டரிலேயே விஜய்சேதுபதி நடித்திருப்பார். டாப் ஹீரோவாக மாறிய நிலையிலும் அவரது முகத்தையும் உடல் வாகையும் வைத்து பலரும் கலாய்த்து வந்தனர். காத்துவாக்குல ரெண்டு காதல் பாடல் வரிகளிலும், சுமார் மூஞ்சி குமாரு உங்களுக்கு இதெல்லாம் ஓவராக தெரியலையா என நயனும் சமந்தாவும் பாடியிருப்பார்கள்.

வில்லன் ரோல் தான்
விக்ரம் வேதா படத்தில் நெகட்டிவ் ரோலில் மிரட்டி எடுத்த விஜய்சேதுபதிக்கு ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்கள் கிடைக்க அவரும் ஒவ்வொரு படத்துக்கும் வெரைட்டி காட்டி வெளுத்து வாங்கினார். ஹீரோவாக நடித்த படங்கள் சொதப்பிய நிலையில், இனிமே இந்த மூஞ்சி வில்லனாகத்தான் நடிக்க லாயக்கு போன்ற விமர்சனங்கள் கிளம்பின.

ஏய் எப்புர்ரா
இந்நிலையில், ட்ரோல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆளே அடையாளம் தெரியாத வகையில் அதிரடியாக ஆணழகன் விஜய்சேதுபதியாக உடல் எடையை எல்லாம் மொத்தமாக குறைத்து சூப்பர் ஸ்லிம்மாகி மிரர் செல்ஃபி எடுத்த போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை ஏய் எப்புர்ரா என புலம்ப வைத்து விட்டார் விஜய்சேதுபதி.