twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உங்களுக்கு சொன்னா புரியாது.. தியேட்டர்ல போய் பாருங்க.. ஓ மை கடவுளே வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸ்!

    |

    Recommended Video

    OH MY KADAVULEY TEAM INTERVIEW |V-CONNECT | FILMIBEAT TAMIL

    சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான ஓ மை கடவுளே படத்திற்கு தியேட்டர்களில் செம்ம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

    ரொம்ப நாள் கழிச்சு, ஒரு நல்ல காதல் திரைப்படத்தையும், செம்ம ஜாலியான படத்தையும் பார்த்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    ராட்சசன் படத்தை தயாரித்து மக்களை மிரட்டிய ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, தற்போது, ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து, காதல் உணர்சியில் அழ வைத்து அனுப்புகிறது.

    அட கொடுமையே.. ஜேம்ஸ் பாண்ட் படத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்.. என்ன ஆச்சு தெரியுமா?அட கொடுமையே.. ஜேம்ஸ் பாண்ட் படத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்.. என்ன ஆச்சு தெரியுமா?

    ஃப்ரெஷ்சா இருக்கு

    ஃப்ரெஷ்சா இருக்கு

    அறிமுக இயக்குநரான அஸ்வத் மாரிமுத்து, தனது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துள்ளார். அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங்கை இதற்கு முன்னதாக தமிழ் ரசிகர்கள் இப்படி பார்த்திருக்க மாட்டார்கள், அந்த அளவில் ஃப்ரெஷ்சாகவும், நடிப்பில் பிச்சி உதறியும் உள்ளனர்.

    வாணி போஜன் அசத்தல்

    வாணி போஜன் அசத்தல்

    கோலிவுட் சினிமாவில் அறிமுகமாகி உள்ள சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன், வரும் காட்சிகள், படத்திற்கு கூடுதல் பலம். பல வருடங்களாக நடித்து வந்தாலும், இந்த படத்தில் புதுமுகமாகவே தெரிகிறார் வாணி போஜன். அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் நல்ல கதைகளை தேர்வு செய்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

    ரன் லோலா ரன் வரிசையில்

    ரன் லோலா ரன் வரிசையில்

    பிரபல ஹாலிவுட் படமான ரன் லோலா ரன், ஷாம், ஜோதிகா நடிப்பில் வெளியான 12 பி பட வரிசையில், ஓ மை கடவுளே படமும் அதுபோன்ற ஒரு வித்தியாசமான எக்ஸ்பீரியன்ஸை ரசிகர்களுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு கரெக்ட்டா கொடுத்திருக்கிறது.

    விடிவி எஃபெக்ட்

    விடிவி எஃபெக்ட்

    விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை பார்த்து விட்டு, அதன் கிளைமேக்ஸ் காட்சியில், கார்த்திக்கும், ஜெஸ்ஸியும் ஒண்ணு சேர்ந்திட மாட்டாங்களா? என ஏங்குவது போல, இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை பார்க்கும் போது, ரசிகர்களுக்கு அது போன்ற உணர்வு ஏற்பட்டதாக பலரும் ட்விட்டரில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    கடவுள் விஜய்சேதுபதி

    கடவுள் விஜய்சேதுபதி

    இயக்குநராக வரும் கெளதம் மேனன், கடவுளாக வரும் விஜய்சேதுபதி, காமெடியில் கலக்கும் சாரா என பலரும் தங்களின் கதாபாத்திரம் அறிந்து கச்சிதமாக நடித்திருப்பது படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு, எங்கேயும் போர் அடிக்காமல், நல்லதொரு படத்தை பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் படம் எப்படி இருக்கு என கேட்கும் ரசிகர்களுக்கு, உங்களுக்கு சொன்னா புரியாது, தியேட்டருக்கு போய் பாருங்க என ஓ மை கடவுளே டீம் சொல்வது போலத்தான் சொல்ல வேண்டும்.

    English summary
    Ashok Selvan’s Valentine’s day release movie Oh My Kadavule doing good at the theaters. Fans who watch the film get a good movie experience over all.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X