என்னோட மனசுக்கு நெருக்கமான படம்.... முண்டாசுப்பட்டி 7 ஆண்டு நிறைவை கொண்டாடும் விஷ்ணு விஷால்

சென்னை : விஷ்ணு விஷால் -நந்திதா ஸ்வேதா லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2014ல் வெளிவந்த படம் முண்டாசுப்பட்டி

இன்றைய தினம் அந்த படம் தனது 7 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.

இதையொட்டி அந்த படம் எப்போதுமே தனது மனதிற்கு நெருக்கமான படம் என்று நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முண்டாசுப்பட்டி படம்

முண்டாசுப்பட்டி படம்

விஷ்ணு விஷால் மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2014ல் வெளிவந்த படம் முண்டாசுப்பட்டி. புகைப்படம் எடுத்துக் கொண்டால் ஆயுள் குறையும் என்ற கடந்த காலகட்டங்களில் மக்களிடம் இருந்த மூடநம்பிக்கையை கதைக்கருவாக கொண்டு எடுக்கப்பட்டது இந்த படம்.

இயக்குநர் ராம்குமார்

இயக்குநர் ராம்குமார்

படத்தில் போதும் போதும் என்ற அளவிற்கு நகைச்சுவையை படம் முழுவதும் அள்ளி தெளித்திருந்தார் அறிமுக இயக்குநர் ராம் குமார். படத்தின் கதை, திரைக்கதை உள்ளிட்ட ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தி ரசிகர்களுக்கு சிறிதும் சலிப்பு ஏற்படாதவகையை திரைக்கதையை அமைத்திருந்தார்.

கொண்டாட்டத்தில் படக்குழு

கொண்டாட்டத்தில் படக்குழு

மக்களும் இந்த படத்தை கொண்டாடினர். தற்போது இந்த படம் வெளிவந்து 7 ஆண்டுகள் நிறைவை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். படத்தின் ஹீரோ விஷ்ணு விஷாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷால் பாராட்டு

விஷ்ணு விஷால் பாராட்டு

தயாரிப்பாளர் சிவி குமாரின் போஸ்ட்டிற்கு கமெண்ட் செய்துள்ள அவர், படம் சிறப்பான சிரிப்பு மருத்துவம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படம் எப்போதுமே தனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது என்றும் கூறியுள்ளார். 7 ஆண்டுகள் முண்டாசுப்பட்டி நிறைவு என்ற டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X