கார்த்திக் சுப்புராஜ் பற்றி இப்படி சொல்லிட்டாரே.. வைரலாகும் டி40 பட நடிகரின் ட்வீட்!

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் குறித்து டி40 படத்தில் நடித்துள்ள மாஸ்டர் அஸ்வந்த் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய்சேதுபதியின் மகன் ராசுக்குட்டியாக நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றவர் அஸ்வந்த்.

தனுஷின் டி40 படத்தின் அப்டேட் குறித்த #D40FirstLookUpdate ஹாஷ்டேக் டிரெண்டாகி வரும் நிலையில், அஸ்வந்தின் ட்வீட்டும் வைரலாகிறது.

ராசு குட்டி

ராசு குட்டி

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் அறிமுகமான மாஸ்டர் அஸ்வந்த், தியாகராஜா குமார ராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகத் பாசில், காயத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் ராசு குட்டி ரோலில் நடித்து அசத்தினார்.

செம்ம துடுக்கு

செம்ம துடுக்கு

தனது துடுக்கான பேச்சு மற்றும் கள்ளம் இல்லாத சிரிப்பால், தமிழக ரசிகர்களை தாண்டி பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் வரை பாராட்டுக்களை பெற்றுள்ளார் மாஸ்டர் அஸ்வந்த். ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கார்த்தி, ஜோதிகா நடிப்பில் வெளியான தம்பி படத்திலும் தனது துடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.

டி40 டிரெண்டிங்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள டி40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் இன்று வெளியாகும் என காலை முதலே தனுஷ் ரசிகர்கள் #D40FirstLookUpdate என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். சுமார் 60 ஆயிரம் ட்வீட்டுக்கு மேலே பதிவிட்டு சென்னை டிரெண்டிங்கில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

என்ன ட்வீட்

டி40 படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், தனுஷின் 40வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், அந்த படத்தில் நடித்துள்ள மாஸ்டர் அஸ்வந்த், டி40 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. கார்த்திக் சுப்புராஜ் பயங்கரமான டைரக்டர். தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கு என ட்வீட் போட்டுள்ளார். அவரது ட்வீட்டை தனுஷ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தம்பி நீயாச்சும்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் குறித்து இப்படியொரு ட்வீட்டை போட்டுள்ள பெரிய மனுஷன் அஸ்வந்திடம் தனுஷ் ரசிகர்கள், தம்பி நீயாச்சும், டி40 ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் கொடுப்பா என கேட்டு வருகின்றனர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு கர்ணன் என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டி40 குறித்து எந்தவொரு அறிவிப்பும் இது வரை வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X