Thalapathy 68 - தளபதி 68ல் கமிட்டான வெங்கட் பிரபு.. அஜித் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: Thalapathy 68 (தளபடி 68) தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபு கமிட்டானது குறித்து அஜித் சொன்ன விஷயம் தெரியவந்திருக்கிறது.

பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசு படத்துக்கு கிடைத்த கலவையான விமர்சனத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதால் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

What Ajith had to say about Venkat Prabhus commitment to Thalapathy 68

அக்டோபர் ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். மேலும் வெளிநாட்டில் ஓய்வில் இருக்கும் விஜய் விரைவில் இந்தியாவுக்கு திரும்பி லியோ படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடக்கலாம் என தெரிகிறது.

தளபதி 68: இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் தனது 68ஆவது படத்தில் கமிட்டானார். அதன்படி படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்துக்கு எப்படி ஒரு மங்காத்தா படத்தை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் இந்தப் படத்தின் மூலம் ஹிட் கொடுக்க வேண்டும் என தளபதி ரசிகர்கள் விரும்புகின்றனர்.

கதை விவாதம்: வெங்கட் பிரபு தற்போது தனது உதவி இயக்குநர்களுடன் கதை விவாதத்தில் தீவிரமாக இருக்கிறார். நிச்சயம் இந்தப் படத்தை மெகா ஹிட்டாக கொடுத்துவிட வேண்டுமென்பதில் அவரும் ஆர்வமாகவே இருக்கிறார். ஜோதிகா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என கருதப்படுகிறது. படத்துக்கான பூஜை விரைவில் போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கப்படும் எனவும்; படத்தை அடுத்த தீபாவளிக்கு அல்லது கோடை விடுமுறையில் ரிலீஸாக்க திட்டமிட்டிருப்பதாகவும் பேச்சு ஓடுகிறது.

What Ajith had to say about Venkat Prabhus commitment to Thalapathy 68

அஜித் வாழ்த்து: இந்நிலையில் அடியே படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் வெங்கட் பிரபு கலந்துகொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் விஜய் படத்தில் கமிட்டானதற்கு அஜித் ஏதேனும் சொன்னாரா என்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, தளபதி 68ல் கமிடானதற்கு என்னிடம் முதலில் வாழ்த்து சொன்னதே அஜித் சார்தான் என தெரிவித்தார்.

தளபதி 68 பிஸ்னெஸ்: முன்னதாக, தளபதி 68 படத்தின் ஆடியோ ரைடஸ் இப்போதே விற்றுவிட்டதாகவும் லியோ படத்தின் ஆடியோ ரைட்ஸை விட இதன் ஆடியோ ரைட்ஸ் விலை அதிகம் என்றும் தகவல் வெளியானது. அதாவது லியோ ஆடியோ ரைட்ஸ் 16 கோடிக்கு போன சூழலில் இதன் ஆடியோ உரிமம் 24 கோடி ரூபாய்க்கு போயிருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X