அமலா பாலுக்கு இருந்தது, நஸ்ரியாவுக்கு இல்லாமல் போயிடுச்சே....
சென்னை: நஸ்ரியாவுக்கு இல்லாத அதிருஷ்டம், அமலாபாலுக்கு உள்ளதாக கிசுகிசுக்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்களில். நஸ்ரியாவுக்கு ஆரம்பம் நல்லா இருந்தும் பினிஷிங் சரியில்லை. ஆனால் அமலா பாலுக்கு பேஸ்மென்ட் வீக்காக இருந்தாலும், பில்டிங் ஸ்ட்ராங்காக இருந்ததை சுட்டிக்காண்பிக்கிறார்கள் திரையுலகினர்.

நேரம், நல்ல நேரம்
தமிழில் பாசில் இயக்கி, ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால் ஜோடியாக நடித்த ‘ஒரு நாள் ஒரு கனவு' திரைப்படத்தில் அறிமுகமானவர் நஸ்ரியா நஸீம். இதன்பிறகு தமிழில் ஹீரோயினாக 'நேரம்' என்ற திரைப்படத்தில் நடித்தாலும் நடித்தார், அவரது நல்ல நேரமோ என்னவோ தெரியவில்லை, தமிழ் கூறும் நல்லுலகு ரசிகர்கள் நெஞ்சில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டார்.

இந்த புன்னகை என்ன விலை
'அதிலும், அந்த சிரிப்பு இருக்கிறதே.. அடடா' என்று ரசிகர்கள் சிலாகித்து சொல்லும் அளவுக்கு எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று, அது ஏதோ ஒன்று அவரது வெகுளித்தனமான சிரிப்பில் இருக்கும். கிறங்கிப்போனார்கள் ரசிகர்கள்.

ராஜாவுக்கேற்ற ராணி
அடுத்து ராஜாராணி திரைப்படத்திலும் ஆர்யாவின் அருமை காதலியாக நடித்து சோகமான முடிவால் ரசிகர்கள் இதயத்தில் சிம்மாசனமிட்டார் நஸ்ரியா. ஆனால் யார் கண் பட்டதோ, திருமணம் செய்து கொள்ளும் முடிவை விரைவாகவே எடுத்துவிட்டு செட்டில் ஆகிவிட்டார்.

தோல்வியுடன் வெளியேறினார்
திருமணத்துக்கு முன்பு கடைசியாக நஸ்ரியா நடித்து தமிழில் வெளியான திரைப்படம் 'திருமணம் எனும் நிக்கா' ஃபிளாப் ஆன சோகத்துடனே தமிழ் திரைப்பட உலகில் இருந்து மூட்டை முடிச்சோடு வெளியேறினார் நஸ்ரியா. அந்த வகையில் திரையுலகில் அவருக்கு அதிருஷ்டம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

பேஸ்மென்ட் வீக்
இதேபோன்று சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட மற்றொரு ஹீரோயின் அமலாபால். சிந்து சமவெளி என்ற வில்லங்க திரைப்படத்தில் அனகா என்ற பெயருடன் கேரளத்தில் இருந்து இறக்குமதியான அமலாபால், சகாப்தம் அந்த படத்தோடு முடிந்தது என்றுதான் கோடம்பாக்கம் நினைத்தது.

கொஞ்சும் மைனா
ஆனால் அடுத்ததாக, மைனா என்ற மாஸ் ஹிட் திரைப்படத்தில் அமலாபால் என்ற பெயருடன் அவர் இறங்கி ஆடிய ஆட்டத்தால் ஆடிப்போய்விட்டது தமிழ்பட உலகம். இதன்பிறகு தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா என முன்னணி ஹீரோக்கள் படங்களில் ஜோடியாக வாய்ப்பு கிடைத்தது அம்மணிக்கு.

அமலாபாலுக்கு 'விஐபி' வெற்றி
இயக்குநர் விஜயை காதலித்து சமீபத்தில் மணமுடித்த அமலாபால் திருமணத்துக்கு முன்பு நடித்து வெளியான திரைப்படம், வேலையில்லா பட்டதாரி. ஒரு படமும் ஓடாமல் பெட்டிக்குள் முடங்கி கொண்டிருந்த தனுஷுக்கு, அத்தி பூத்தாற்போல கிடைத்துள்ள வெற்றி திரைப்படமாக இது அமைந்துவிட்டது. அப்புறம் என்ன வெற்றியுடன் விடைபெற்றால் அமலாபால்.

இரண்டாவது இன்னிங்ஸ்
நஸ்ரியாவை பொறுத்தளவில் திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார், ஆனால் அமலாபால் மீண்டும் நடிக்க வாய்ப்புள்ளது. எது எப்படியோ, திருமணத்துக்கு முந்தைய படத்தை வெற்றியோடு முடித்துக் கொடுக்க தேவையான அதிருஷ்டம் அமலாபாலிடம் இருந்துள்ளது, நஸ்ரியாவிடம் இல்லை என்பது உண்மைதானே!


Click it and Unblock the Notifications











