»   »  என்னாது, நயன்தாராவுக்கு ஜோடி அனிருத்தா?: ஒரு நியாயம் வேண்டாமா?

என்னாது, நயன்தாராவுக்கு ஜோடி அனிருத்தா?: ஒரு நியாயம் வேண்டாமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
நயன்தாராவுடன் அனிருத் - என்ன கொடும சார் இது?- வீடியோ

சென்னை: கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக அனிருத் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் கோலமாவு கோகிலா. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அனிருத்துக்கு நடிக்க வாய்ப்பு வராமல் இல்லை.

What!!!: Anirudh to act with Nayanthara?

வாய்ப்புகள் வந்தும் அவர் நடிக்க சம்மதிக்கவில்லை. இந்நிலையில் படிக்கும் காலத்தில் தனது சீனியரான நெல்சன் கோலமாவு கோகிலா படத்தில் நடிக்க அழைத்ததாகவும், அனிருத் சம்மதம் சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிக்கும் வாய்ப்பு என்றால் சும்மா இல்லை நயன்தாராவுக்கு ஜோடியாம். கவுரவத் தோற்றத்தில் பத்து நிமிடங்கள் வந்துவிட்டு போவாராம் அனிருத்.
நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்ற சிவகார்த்திகேயனின் ஆசை அண்மையில் நிறைவேறியது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் செல்லக்குட்டியும் நயன்தாராவுடன் நடிக்க உள்ளாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

English summary
According to reports, music director Anirudh is set to make his acting debut in Nayanthara's Kolamavu Kokila.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X