இந்த வார பிக் பாஸ் எபிசோடு எப்படி இருக்கும்? கமல் என்னென்ன பிரச்சனை எல்லாம் கையில் எடுப்பார்?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நிகழ்ச்சி கண்டிப்பாக நடைபெறும் என்பது கமல் அசத்தலாக வந்து பேசிய புரமோ மூலம் தெளிவாகி உள்ளது.

Recommended Video

பெண்களை மட்டும் Target செய்யும் Aari ? | Filmibeat Tamil

நிவர் புயல் காரணமாக இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில அட்ஜெஸ்ட்மென்ட்கள் நடத்தப்பட்டாலும், எந்தவொரு நிறுத்தமும் இல்லாமல், தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வாரம் கமல் சார் என்னென்ன பிரச்சனை எல்லாம் கையில் எடுத்து பேசுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஒரு தனி லிஸ்ட்டே போட்டு வைத்துள்ளனர்.

ஹீரோ வில்லன்

ஹீரோ வில்லன்

ஹீரோ ஆகணுமா வந்து எங்கிட்ட சண்டை போடுங்க என சொடக்குப் போட்டு பேசிய பாலாஜி, ஆரி அதை பற்றி பேசிய போது, அப்படியெல்லாம், அந்த டோனில் எல்லாம் தான் பேசவே இல்லை என சொன்ன விவகாரத்தை நிச்சயம் கையில் எடுத்து பேசுவார் என்பது முதல் புரமோவில் கமல் சொன்ன ஹீரோ வில்லன் வசனம் மூலமே தெளிவாக தெரிகிறது.

வளர்ப்பு மேட்டர்

வளர்ப்பு மேட்டர்

ஆரி தன்னோட தாய்மையை குறை சொன்னார் என அழுது ஆட்டம் காட்டிய சம்யுக்தா, ஆரியின் வளர்ப்பு பற்றி பேசியதும், இந்த வாரம் கமல் விசாரிப்பார் என்று தெரிகிறது. ஆரிக்கும், சம்யுக்தாவுக்கும் சமமான குட்டு கிடைக்கப் போகிறதா? இல்லை சம்யுக்தாவுக்கு ஒரு குட்டு ஜாஸ்தியா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

கலீஜ் பிரச்சனை

கலீஜ் பிரச்சனை

சனம் ஷெட்டியை பார்த்து, பார்க்க நீங்க அழகா இருந்தாலும், வாயை திறந்தா கலீஜா இருக்கீங்க என சம்யுக்தா ரொம்ப தெனாவட்டாக பேசியதையும் கமல் எடுத்து சனி மற்றும் ஞாயிறு நிகழ்ச்சியில் விளாசுவார் என்றே தெரிகிறது. சனம் ஷெட்டி, சும்மா எல்லோரிடமும் பிரச்சனை பண்ணுவது குறித்தும் கமல் கேட்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்து வருகிறது.

தனிப்பட்ட விஷயம்

தனிப்பட்ட விஷயம்

பாலாஜியின் தனிப்பட்ட விஷயத்தை டச் பண்ணி பேசாமல், பிக் பாஸ் வீட்டில் நடக்கும் விஷயங்களை பற்றி அர்ச்சனா கேள்வி கேட்டு இருக்கலாம் என கமல் கண்டிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், மைக் மேட்டர் குறித்தும், கேட்க வேண்டும் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் ஒவ்வொரு பாயின்ட்டாக எடுத்துக் கொடுத்து வருகின்றனர்.

ரியோ கேப்டன்சி

ரியோ கேப்டன்சி

போன முறை ரியோ கேப்டனாக இருந்த போது பிக் பாஸ் வீட்டை எடுத்து நடத்தியதற்கும், இந்த வாரம் அவர் பிக் பாஸ் வீட்டை எடுத்து கையாண்டதற்கும் உள்ள வித்தியாசங்கள் குறித்து கமல் நிச்சயம் கேள்வி கேட்பார் என்றும், அர்ச்சனாவின் அன்பு ஆயுதம் மற்றும் ரம்யாவின் அதிரடி மாற்றங்கள் பற்றிய கேள்விகளும் இருக்கும் என தெரிகிறது.

ஈடுபாடு குறைவு

ஈடுபாடு குறைவு

மேலும், முக்கிய பிரச்சனையாக ஈடுபாடு குறைவு என ஆரியையும் ரியோவையும் என்ன காரணத்திற்காக தேர்வு செய்தார்கள் என்றும், ஷிவானி சரியான காரணம் கூட சொல்லாமல், பாலா பாட்டுக்கு அப்படியே பின் பாட்டு பாடியது என ஏகப்பட்ட விஷயங்கள் பற்றியும், நிவர் புயல் காரணமாக கொடுக்கப்பட்ட பாதுகாப்பு விஷயங்கள் பற்றியும் பேசுவார் என்று தெரிகிறது.

தட்டுவாரா தடவுவாரா

தட்டுவாரா தடவுவாரா

தப்புன்னா தட்டிக் கேட்பேன், நல்லதுன்னா தட்டிக் கொடுப்பேன் என சொன்ன கமல், ஒவ்வொரு வாரமும் தட்டிக் கேட்காமல், தடவியே கொடுத்து வருகிறார் என்கிற மிகப்பெரிய குற்றச்சாட்டும் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த வாரமாவது தட்டுவாரா? தடவுவாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X