ஐமேக்ஸுக்கும் ஆப்பா?.. லியோ படம் இதுவரை சந்தித்துள்ள மொத்த பிரச்சனைகள்.. தலையே சுத்துதே!

சென்னை: ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாகப் போவதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், ஐமேக்ஸ் ப்ரீமியர் காட்சிகளும் தற்போது வெளிநாடுகளில் ரத்து செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சில ரசிகர்கள் ஐமேக்ஸ் திரையரங்கில் லியோ வெளியாகாத நிலையில், பணம் ரீஃபண்ட் செய்யப்பட்டு இருக்கும் ஸ்க்ரீன் ஷாட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

What are the issues Vijays Leo movie faced till release list is here

தளபதி விஜய் நடிப்பில் இன்னும் 5 நாட்களில் வெளியாக உள்ள லியோ படம் இதுவரை சந்தித்துள்ள ஒட்டுமொத்த பிரச்சனைகள் குறித்த பட்டியலையும் இங்கே பார்க்கலாம் வாங்க..

மாஸ்டரில் பெரிய பஞ்சாயத்து: நடிகர் விஜய் வருமான வரியை சரியாக கட்ட வில்லை என்பது தொடர்பாக மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்தே வருமான வரி அதிகாரிகள் நடிகர் விஜய்யை காரில் அழைத்துச் சென்றது பெரும் பரபரப்பை கிளப்பியது. மாஸ்டர் ஷூட்டிங்கின் முடிவில் தனது படை பலத்தை காட்ட நெய்வேலியில் ரசிகர்கள் மத்தியில் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோக்கள் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தின.

லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் சர்ச்சைகள்: நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அனிருத் இசையில் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியான நிலையில், விஜய் பாடிய நா ரெடி தான் பாடலின் லிரிக் வீடியோவில் விஜய் சிகரெட் பிடிப்பது சர்ச்சையை கிளப்பியது.

அதன் பின்னர் அந்த பாடலில் இடம்பெற்ற "மில்லி உள்ளே போனா கில்லி வெளில வருவான்", "பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டாவ கொண்டா சியர்ஸ் அடிக்க" உள்ளிட்ட பாடல் வரிகளுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த வரிகளை மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆடியோ லான்ச் ரத்து: லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்ட அரங்கில் நடைபெற போவதாகவும், மதுரை, கோவை என தமிழ்நாடு முழுக்க நடைபெற போவதாகவும் ஏகப்பட்ட தகவல்கள் வந்த நிலையில், கடைசியாக நேரு ஸ்டேடியத்தில் தான் நடைபெறும் என முடிவு செய்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரியில் நடந்ததை போல அசம்பாவிதம் ஆனால், ரசிகர்களுக்கு சிக்கல் என்பதை மனதில் கொண்டு இசை வெளியீட்டு விழாவையே விஜய் ரத்து செய்து விட்டார். ஆனால், அதற்கு பின் பல காரணங்களும் தலையீடுகளும் இருக்கிறது என்கின்றனர்.

கெட்ட வார்த்தை சர்ச்சை: லியோ படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில், அதில் இடம்பெற்ற விஜய் பேசும் அந்த கெட்ட வார்த்தைக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். விஜய் மூலமாக இளம் தலைமுறையினர் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் அந்த கெட்ட வார்த்தை சென்று சேர்ந்திருப்பதாக பெரும் சர்ச்சை வெடிக்க அந்த கெட்ட வார்த்தை கடைசியாக மியூட் செய்யப்பட்டது.

அதிகாலை காட்சிக்கு ஆப்பு: சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதிகாலை காட்சி திரையிடக் கூடாது என்கிற அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. 7 மணிக்காவது முதல் காட்சி திரையிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 மணிக்குத் தான் முதல் ஷோ போட வேண்டும் என்றும் விதிகளை மீறும் தியேட்டர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஐமேக்ஸ் ப்ரீமியர் ரத்து: இந்நிலையில், கடைசியாக ஐமேக்ஸ் ப்ரீமியர் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். படம் ரிலீஸ் நெருங்க நெருங்க இன்னும் என்னவெல்லாம் நெருக்கடி நடிகர் விஜய் நடித்த லியோ படத்துக்கு வரும் என்று தெரியவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X