For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாகுபலி மாதிரி கேட்டா...அதையே சுட்டிருக்கீங்களே...பொன்னியின் செல்வனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

  |

  சென்னை : பாகுபலி படத்திற்கு பிறகு பிரம்மாண்ட வரலாற்று படங்கள் எடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது. தெலுங்கில் துவங்கிய இந்த கலாச்சாரம் தற்போது பாலிவுட், மல்லுவுட், கோலிவுட் ஆகியவற்றிலும் அதிகரித்து வருகிறது.

  Recommended Video

  Ponniyin Selvan | பின் வாங்குற பேச்சுக்கே இடமில்லை *Kollywood | Filmibeat Tamil

  தெலுங்கில் ருத்ரமாதேவி உள்ளிட்ட பல படங்கள் வந்தன. மலையாளத்தில் மரைக்காயர், இந்தியில் மணிகர்னிகா, சாம்ராட் ப்ருத்விராஜ் போன்ற பல படங்கள் வெளிவந்தன. தற்போதும் இந்தியில் ஆதிபுருஷ் போன்ற பிரம்மாண்ட படங்கள் எடுக்கப்பட்டு தான் வருகின்றன.

  எத்தனை படங்கள் வந்தாலும் ராஜமெளலி இயக்கிய பாகுபலி இரண்டு பாகங்களின் வரவேற்பு, மாஸ், வசுல் என எதிலும் அடித்துக் கொள்ள முடியவில்லை. இந்த படங்கள் வெற்றி பெறவும் இல்லை. ஆனால் இதில் தனித்துவமான எதிர்பார்ப்பை பெற்றுள்ளது மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்.

  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்னவாகும்... இப்படித்தான் ஆகும்!கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்னவாகும்... இப்படித்தான் ஆகும்!

  ஆரம்பமே அமர்க்களப்படுத்தியது

  ஆரம்பமே அமர்க்களப்படுத்தியது

  படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்க்க துவங்கி விட்டனர். ஒவ்வொரு அப்பேட்டையும் கொண்டாடினார்கள். படம் ரிலீஸ் வந்ததும் எப்போ செப்டம்பர் மாதம் வரும் என ஆர்வமாக எதிர்பார்க்க துவங்கினர். தமிழில் சரியான கதையுள்ள படங்கள் வருவதில்லை, பிற மொழி படங்கள் வெற்றி பெறுகையில் தமிழ் படங்கள் தோல்வி அடைவதாக விமர்சிக்கப்பட்ட போததும், பொன்னியின் செல்வன் இதற்கு பதில் சொல்லும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் கமெண்ட் செய்து வந்தனர்.

  ப்ரொமோஷன் வேலைகள் ஆரம்பம்

  ப்ரொமோஷன் வேலைகள் ஆரம்பம்

  ஜுலை முதல் வாரத்தில் பொன்னியின் செல்வன் டீசர் வரும் ஆவலாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் டீசர் ரிலீஸ் இம்மாத இறுதிக்கு தள்ளி போவதாக வந்த தகவல் வெளியானது. கிராஃபிக்ஸ் பணிகள் மீதமிருப்பதாக சொல்லப்பட்டது. இந்த சமயத்தில் ரசிகர்களை இப்போதே கொண்டாட்ட மனநிலைக்கு மாற்றும் வகையில் ப்ரொமோஷன் வேலைகளை படக்குழு துவங்கி உள்ளது.

  வருகிறான் சோழன் க்ளிம்ப்ஸ்

  வருகிறான் சோழன் க்ளிம்ப்ஸ்

  இதன் முதல் படியாக இன்று வருகிறான் சோழன்...சாகசமான வாரத்திற்கு தயாராகுங்கள் என்ற கேப்ஷனுடன் இன்று மோஷன் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. போரில் வென்று சோழர்களின் கொடி ஏற்றப்படுவது போல் போர்க்கள பேக்கிரவுண்டில் இந்த க்ளிம்ப்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் ரசிகர்களை கொண்டாட வைத்தாலும், மற்றொரு புறம் குழப்பமடைய வைத்துள்ளது.

  தேதியே இல்லாமல் வந்த க்ளிம்ப்ஸ்

  தேதியே இல்லாமல் வந்த க்ளிம்ப்ஸ்

  எதற்காக இந்த மோஷன் போஸ்டர், என்ன அப்டேட், டீசர் வெளியிட போகிறார்களா, டீசர் வெளியீடு என்றால் அதன் தேதி அறிவிப்பதில் ஏன் இத்தனை தயக்கம், தாமதம், என்ன தான் பிரச்சனை, பல மாதங்களுக்கு முன்பே ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பணிகளை முடித்து விட்டார், உலகின் பல நாடுகளிலும் கிராஃபிக்ஸ் வேலைகள் நடப்பதாக சொன்னார்ளே, ஒரு மெகா பட்ஜெட் படம்...அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய படத்திற்கு ஏன் ஆரம்பத்திலேயே இத்தனை தயக்கம், குழப்பம் என பல விதமான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

  பாகுபலி மியுசிக்கை காப்பி அடிச்சிருக்காங்களா

  பாகுபலி மியுசிக்கை காப்பி அடிச்சிருக்காங்களா

  கேள்விகள் ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் இந்த மோஷன் போஸ்டர் கிண்டலுக்கு ஆளாகி உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பிஜிஎம் இசை பாகுபலி 2 படத்தில் வரும் ஒரே ஒரு ஊரில் என்ற பாடலை நினைவுபடுத்துவதாக உள்ளது. இதை கேட்ட நெட்டிசன்கள், பாகுபலி மாதிரி கேட்டா பாகுபலி மியுசிக்கை அப்படியே எடுத்து வச்சிருக்கீங்களே...ஏ.ஆர்.ரஹ்மானா இப்படி செய்திருக்கிறார். சோழன் வருகிறான், சேரன் வருகிறான் என இன்னும் பில்டப் மட்டுமே செய்து கொண்டிருக்காமல் சட்டுபுட்டுன்னு டீசரை ரிலீஸ் பண்ணுங்கப்பா.

  ஓவர் பில்டப் பயமா இருக்குப்பா

  ஓவர் பில்டப் பயமா இருக்குப்பா

  அவன் அவன் பழைய டிராப்பான படங்களின் ஸ்டில்களை பகிர்ந்து இது தான் பொன்னியின் செல்வன் ஸ்டில் என கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறான். நீங்க எப்போ உண்மையான ஸ்டில்லை வெளியிடுவீங்க...நாங்கள் ரொம்ப எதிர்பார்த்த பல படங்கள் ஏமாற்றி விட்டன. நீங்களும் ஓவர் பில்டப் கொடுத்து படத்தை சொதப்பி விடாதீர்கள் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

  English summary
  Today movie makers released motion poster for Ponniyin Selvan part 1. But this bgm music was resembled to Baahybali 2 song music. Netizens trolled this in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X